Home
Computer

இன்டர்நெட் சென்டர்களில் இப்படி செய்கிறார்களா?

By Keerthi

இன்றைக்கு பெரும்பாலான முறையற்ற, ஆதாரமற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் தீவிரவாதிகளின் செயல்பாடுகள், இன்டர்நெட் மையங்களிலிருந்தே மேற்கொள்ளப் படுவதனை உறுதி செய்த, மத்திய அரசு, இந்த சைபர் கபேக்களுக்கான சட்ட திட்டங்களை மேலும் கடுமையாக்கியுள்ளது.

தகவல் தொழில் நுட்ப சட்ட விதிமுறைகளில், புதிய சட்ட வரையறைகளும் விதிமுறைகளும் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. இவற்றின் படி, இன்டர்நெட் மையத்தைப் பயன்படுத்த வரும் ஒருவர், தன் அடையாளத்தினை முறையாகவும், முழுமையாகவும், நிறைவாகவும் பதிந்தால் மட்டுமே, மையத்தினைப் பயன்படுத்த முடியும்.

தங்கள் அடையாளம் குறித்து, மையப் பொறுப்பாளரைத் திருப்தி படுத்த முடியாதவர்களை, மையங்களில் இயங்கும் கம்ப்யூட்டர் வழி அதன் வெப் கேமரா கொண்டு படம் எடுக்கப்பட வேண்டும். அந்த போட்டோக்கள், அடையாள பதிவு ஏடுகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

இன்டர்நெட் சென்டர்களில் இப்படி செய்கிறார்களா?

பயன்படுத்தும் ஒவ்வொருவர் குறித்த தகவல்கள் மற்றும் பயன்படுத்திய காலம் குறித்த தகவல்கள், பதிவேட்டில் பதியப்பட்டு, குறைந்தது ஆறு மாதங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த பதிவேட்டில், பயன்படுத்தியவர் பார்த்த இன்டர்நெட் தளங்களின் முகவரிகளும் பதியப்பட வேண்டும்.

இன்டர்நெட் இணைப்பிற்குப் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களைப் பிரித்து வைக்கும் தடுப்புகள், தரையிலிருந்து நான்கு அடி, ஆறு அங்குல உயரத்திற்கு மேல் இருக்கக் கூடாது.

பாலியல், வன்முறை, ஆபாசம் மற்றும் தடை செய்யப்பட வேண்டிய தளங்களை யாரும் பார்க்க முடியாத படி தடை செய்திடும் சாப்ட்வேர் தொகுப்புகள், இன்டர்நெட் மைய கம்ப்யூட்டர்களில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

நண்பரே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி செய்திகளை பெற்றிடுங்கள் இதோ லைக் பண்ண இதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X