ஸ்மார்ட்போனுக்கான புதிய சிப்செட்டை அறிமுகப்படுத்திய இன்டெல்!

Posted By: Karthikeyan
 ஸ்மார்ட்போனுக்கான புதிய சிப்செட்டை அறிமுகப்படுத்திய இன்டெல்!

இப்போது சந்தைக்கு வரும் பெரும்பாலான டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் எல்லாமே க்வல்காம் மற்றும் என்விடியா வழங்கும் ப்ராசஸர்களைக் கொண்டுள்ளன. சமீபத்தில் இந்த வரிசையில் இன்டலும் இணைந்திருக்கிறது. அதாவது ஸ்மார்ட்போனுக்கான சிப்பை அறிமும் செய்திருக்கிறது. அதற்காக இன்டல் இப்போது ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டுகளை இயக்கும் புதிய சிப்பை களமிறக்குவதில் மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த புதிய சிப்பிற்கு ஆட்டம் மெட்பீல்டு சிப்ஸ் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இன்டல் ஏற்கனவே ஆப்பிளோடு இணைந்து டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன் துறையில் தனது பங்களிப்பை செய்து வருகிறது. ஏற்கனவே வந்திருக்கு வேண்டிய இந்த புதிய சிப்புகள் பல காரணங்களுக்காக சற்று கால தாமதமாகிவிட்டன. ஆனால் இன்டல் தனது பழைய தவறுகளைத் திருத்தி இந்த சிப்புகளை உரிய நேரத்தில் களமிறக்க இப்போது மிகத் தீவிரமாக உழைத்து வருகிறது.

ஏனெனில் பல மொபைல் தயாரிப்பாளர்கள் இன்டலின் சிப்புகளை தமது மொபைல்கள் மற்றும் டேப்லெட்டுகளில் இணைக்க தயாராகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக மோட்டோரோலா மற்றும் லெனோவா நிறுவனங்கள் இன்டலின் சிப்புகளைக் கொண்டு தமது சாதனங்களைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டன. அதனால் மிக விரைவில் இன்டல் மெட்பீல்டு ப்ராசஸர்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை மிக விரைவில் சந்தையில் பார்க்க முடியும்.

மோட்டோரோலா ஏற்கனவே அதற்கான அறிவிப்பை இந்த ஆண்டு நடந்த நுகர்வோர் கண்காட்சியில் அறிவித்திருக்கிறது. ஆனால் இன்டல் சிப்புகள் இன்னும் தயாராகாத நிலையில் புதிய இன்டல் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் இன்னும் களமிறங்காமல் இருக்கின்றன.

அதுபோல் லாவா நிறுவனமும் இன்டலின் சிப் கொண்டு தனது புதிய ஸ்மார்ட்போனை களமிறக்க இருக்கின்றது. இந்த புதிய ஸ்மார்ட்போனுக்கு லாவா எக்சோலோ 900 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 1.6 ஜிஹெர்ட்ஸ் கொண்ட இன்டல் ஸட்2460 ப்ராசஸரைக் கொண்டிருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்