விண்டோஸ் 8 இயங்குதளத்துடன் இன்டெலின் புதிய லேப்டாப்!

உயர்தர தொழில் நுட்பங்களின் முன்னோடியாக இன்டெல் விளங்குகிறது. உலக அளவில் இன்டெலுக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு. இப்போது வந்திருக்கும் செய்தி என்னவென்றால் குறைந்த எடை கொண்ட ஆனால் உயர் தொழில் நுட்பங்களை கொண்ட உயர்தர லேப்டாப்புகளையும் மற்றும் டேப்லெட்டுகளையும் களமிறக்க இருக்கிறது என்பதுதான்.
இதன் முக்கிய சிறப்பு இந்த லேப்டாப்புகள் மற்றும் டேப்லெட்டுகள் செய்கைகள், அசைவுகள் மற்றும் குரல் ஒலி ஆகியவற்றை கொண்டு கட்டுப்படுத்தும் வகையில் இவை இயங்கும்
இன்டெலின் புதிய லேப்டாப் விண்டோஸ் 8 இயங்குதளம் கொண்டிருக்கும். விண்டோஸ் 8 இயங்கு தளம் கொண்ட லேப்டாப் அதன் கீபோர்டுக்குக் கீழ் டச் பேடைக் கொண்டிருக்கும்.
இன்டெல் நிறுவனத்தின் துணை தலைவர் கூறும் போது, சாதாரண மக்களும் தங்களது அல்ட்ராபுக்குகளை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக குறைந்த விலைக்குத் தரவேண்டும் என்பதில் இன்டெல் முனைப்போடு இருப்பதாகக் கூறினார்.
அதோடு இன்னும் ஒரு தகவல், தமது புதிய லேப்டாப்பில் குரல் அறியும் தொழில் நுட்பத்தை இணைக்க வேண்டும் என்பதற்காக இன்டெல் நிறுவனம் நுவான்ஸ் கம்யூனிகேசனோடு ஒப்பந்தம் செய்யவிருக்கிறது. இந்த தொழில் நுட்பம் இந்த ஆண்டிலேயே இன்டெல் அல்ட்ராபுக்குகளில் இணைந்து வரும். இந்த குரல் அறியும் தொழில் நுட்பம் ஆங்கிலம், மாண்டரின், பிரஞ்சு மற்றும் ஸ்பானிஷ் உள்பட 9 மொழிகளில் வருகிறது.
மேலும் இண்டலின் துணை இயக்குனர் இந்த புதிய விண்டோஸ் 8 அல்ட்ரா புக் மாதிரியை காண்பித்தார். இந்த அல்ட்ராபுக் இன்டெலின் சிப்களை பயன்படுத்தி அதன் மூலம் என்எப்சி சிப்களின் டேட்டாவை ரீட் செய்யும். இன்டெலின் இந்த புதிய லேப்டாப் லாஸ் வேகாசில் நடைபெறும் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications