Home
Computer

ஏப்ரல் 19 வரை எந்த லேப்டாப் மாடலையும் வாங்காதீங்க: வருகிறது சூப்பரான Infinix இன்பினிக்ஸ் லேப்டாப்.!

இன்பினிக்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது தரமான சாதனங்களை அறிமுகம் செய்கிறது இன்பினிக்ஸ் நிறுவனம்.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். குறிப்பாக இந்த புதிய லேப்டாப் ஆனது கம்மி விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் மாடலின் அம்சங்களைப் பார்ப்போம்.

விரைவில் களமிறங்கும் புதிய இன்பினிக்ஸ் லேப்டாப்.!

இன்பினிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள புதிய லேப்டாப் ஆனது மிக மெல்லிய மற்றும் பிரீமியம் டிசைன், அலுமினியம் அலாய் மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த லேப்டாப் மாடலை நம்பி வாங்கலாம். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

குறிப்பாக இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் மாடலில் மிக மெல்லிய பெசல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 15.6 இன்ச் விவிட் கலர்-ரிச் டிஸ்பிளே வசதியுடன் இந்த புத்தம் புதிய லேப்டாப் மாடல் வெளிவரும். பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் 82 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, 250 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த இன்பினிக்ஸ் லேப்டாப் ஆனது சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் மென்பொருள் வசதியும் மிகவும் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

விரைவில் களமிறங்கும் புதிய இன்பினிக்ஸ் லேப்டாப்.!

அதாவது இண்டெல் நிறுவனத்தின் i3 10th Gen பிராசஸர் வசதியுடன் இந்த புத்தம் புதிய இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் மாடல் வெளிவரும். குறிப்பாக இந்த லேப்டாப் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு backlit கீபோர்டு ஆதரவுடன் இந்த புதிய லேப்டாப் மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் மாடலில் இரண்டு 2 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் இந்த புதிய லேப்டாப் மாடல். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த இன்பினிக்ஸ் லேப்டாப் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

40W பேட்டரி வசதியைக் கொண்டு இந்த இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் அறிமுகமாகும். எனவே இந்த லேப்டாப் மாடல் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 45W டைப் சி சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த லேப்டாப். எனவே பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால் இந்த லேப்டாப் மாடலை ஒரு மணி நேரத்தில் 75 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடமுடியும்.

விரைவில் களமிறங்கும் புதிய இன்பினிக்ஸ் லேப்டாப்.!

டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், டைப் ஏ யுஎஸ்பி 3.2 ஜென்1 மற்றும் எச்டிஎம்ஐ போர்ட், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த இன்பினிக்ஸ் இன்புக் Y1பிளஸ் நியோ லேப்டாப் வெளிவரும். மேலும் இந்த லேப்டாப் குறைந்த விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix InBook Y1 Plus Neo will be launched in India on April 19: Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X