Home
Computer

அடேங்கப்பா.. புதிய லேப்டாப் இவ்வளவு கம்மி விலையிலா? கலக்குங்க Infinix.!

இன்பினிக்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் தரமான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது.

அதாவது தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் (Infinix INBook Y1 Plus Neo) தரமான அம்சங்களுடன் குறைந்த விலையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய லேப்டாப் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது புதிய இன்பினிக்ஸ் லேப்டாப் மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிய லேப்டாப் இவ்வளவு கம்மி விலையிலா? கலக்குங்க Infinix.!

15.6-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு இந்த இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் 1920 x 1080 பிக்சல்ஸ், 260 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் ஆனது சிறந்த வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.

1.1ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் Celeron என்5100 குவாட்-கோர் பிராசஸர் உடன் இன்டெல் யுஎச்டி கிராபிக்ஸ் வசதியைக் கொண்டு இந்த இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் வெளிவந்துள்ளது. எனவே இந்த லேப்டாப் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த லேப்டாப் மாடலுக்கு வழங்கப்பட்டுள்ள பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய லேப்டாப் இவ்வளவு கம்மி விலையிலா? கலக்குங்க Infinix.!

விண்டோஸ் 11 ஹோம் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் 2எம்பி ஃபுல் எச்டி வெப் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் லேப்டாப் மாடல். குறிப்பாக இந்த லேப்டாப் 82% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மற்றும் அல்ட்ரா-நாரோ பேசல்களைக் கொண்டுள்ளது.

8GB LPDDR4X ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப். மேலும் இந்த லேப்டாப் மாடலில் Ice Storm கூலிங் சிஸ்டம் வசதி உள்ளது. இது லேப்டாப்பின் வெப்பநிலையை வேகமாக குறைக்கும் என்று கூறப்படுகிறது.

40Wh பேட்டரி வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் வெளிவந்துள்ளது. மேலும் இதில் 45W டைப்-சி பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே 60 நிமிடங்களில் 75 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். அதேபோல் இந்த லேப்டாப் 8 மணி நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வைஃபை 5 802.11ஏசி, புளூடூத் 5.1, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் 2 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோபோன் ஜாக் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப்.

புதிய லேப்டாப் இவ்வளவு கம்மி விலையிலா? கலக்குங்க Infinix.!

ப்ளூ, சில்வர், கிரே நிறங்களில் இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் வெளிவந்துள்ளது. மேலும் 8ஜிபி ரெம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் மாடலின் விலை ரூ.20,900-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.22,990-ஆக உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் வரும் ஏப்ரல் 26-ம் தேதி இந்த லேப்டாப் மாடலை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix INBook Y1 Plus Neo Laptop Launched in India at Rs.20,990 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X