Home
Computer

இனி டெல், அசுஸ் லேப்டாப் எதுக்கு? பேசாம இந்த கம்மி விலை Infinix லேப்டாப் வாங்கிடலாமா? தரமான அம்சங்கள்.!

டெல், அசுஸ், சியோமி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் லேப்டாப் மாடல்களை சற்று உயர்வான விலையில் தான் அறிமுகம் செய்கின்றன. அதாவது
இந்நிறுவனங்கள் ரூ.45,000-க்கு மேல் தான் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்கின்றன. ஆனால் இன்பினிக்ஸ் (Infinix)நிறுவனம் மட்டும் கம்மி விலையில் லேப்டாப்களை அறிமுகம் செய்கிறது.

அதாவது மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது இன்பினிக்ஸ் நிறுவனம். தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் அசத்தலான அம்சங்களுடன் கம்மி விலையில் வெளிவந்துள்ளது.

பேசாம இந்த கம்மி விலை Infinix லேப்டாப் வாங்கிடலாமா? தரமான அம்சங்கள்

இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் லேப்டாப் அம்சங்கள்

இப்போது முதலில் Infinix INBook Y1 Plus லேப்டாப் மாடலின் அமசங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த புதிய இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் லேப்டாப் ஆனது 15.6-இன்ச் ஃபுல் எச்டி vivid டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1920×1080 பிக்சல்ஸ், 250 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது.

10வது ஜென் இன்டெல் கோர் ஐ3 பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் லேப்டாப் வெளிவந்துள்ளது. எனவே
லேப்டாப் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 8GB LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது
இந்த புதிய லேப்டாப்.

பேசாம இந்த கம்மி விலை Infinix லேப்டாப் வாங்கிடலாமா? தரமான அம்சங்கள்

குறிப்பாக இந்த இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் லேப்டாப் மாடலில் SSD ஸ்லாட் வசதியும் உள்ளது. அதேபோல் விண்டோஸ் 11 ஹோம் எடிஷன் மூலம் இயங்குகிறது இந்த இன்பினிக்ஸ் லேப்டாப் மாடல். குறிப்பாக இந்த புதிய லேப்டாப் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் லேப்டாப் மாடலில் ஃபுல் எச்டி வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். அதாவது இந்த லேப்டாப் 2எம்பி
கேமரா வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த இன்பினிக்ஸ் லேப்டாப் 3.5 எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்துள்ளது.

பேசாம இந்த கம்மி விலை Infinix லேப்டாப் வாங்கிடலாமா? தரமான அம்சங்கள்

டூயல்-பேண்ட் வைஃபை 5,புளூடூத் 5.1, யுஎஸ்பி-ஏ போர்ட், யுஎஸ்பி-சி போர்ட், எச்டிஎம்ஐ 1.4 போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் லேப்டாப் மாடல். இதுதவிர தரமான backlit கீபோர்டு ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான லேப்டாப்.

தரமான பேட்டரி

இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் லேப்டாப் மாடலின் பேட்டரி வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். அதாவது இந்த புதிய லேப்டாப் மாடல் 50Wh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 65 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கூட உள்ளது. மேலும் இந்த லேப்டாப் மாடலை 1 மணி நேரத்தில் 70 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும். பின்பு 10 மணி நேரம் வீடியோ பிளேபேக் வழங்குகிறது இந்த அட்டகாசமான லேப்டாப்.

பேசாம இந்த கம்மி விலை Infinix லேப்டாப் வாங்கிடலாமா? தரமான அம்சங்கள்

இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் லேப்டாப் விலை?

வரும் பிப்ரவரி 24-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது இந்த இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் லேப்டாப் மாடல். பின்பு கிரே, சில்வர் மற்றும்
புளு நிறங்களில் இந்த லேப்டாப் கிடைக்கும். குறிப்பாக ரூ.27,999-விலையில் இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் லேப்டாப் வாங்க கிடைக்கும். குறிப்பாக இந்த
லேப்டாப் மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix INBook Y1 Plus budget laptop with 15.6-inch full HD display launched in India: price, specifications: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X