பட்ஜெட் விலையில் அறிமுகமான இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் டேப்டாப்.! என்னென்ன அம்சங்கள்?

|

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் எனும் லேப்டாப் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசத்தலான வடிவமைப்பு

அசத்தலான வடிவமைப்பு

இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் லேப்டாப் மெட்டல் பாடி மற்றும் aluminium alloy உடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் சாதனம் ஆனது ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் 1920 x 1080 பிக்சல்கள் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. மேலும் இதன் டிஸ்பிளேவில் பல அம்சங்கள் உள்ளன.

வங்கி வாடிக்கையாளர்களே உஷார்.! தெரியாமல் கூட 'இதை' மட்டும் கிளிக் செய்யாதீர்கள்? ஏன் தெரியுமா?வங்கி வாடிக்கையாளர்களே உஷார்.! தெரியாமல் கூட 'இதை' மட்டும் கிளிக் செய்யாதீர்கள்? ஏன் தெரியுமா?

டிஸ்பிளே அம்சங்கள்

டிஸ்பிளே அம்சங்கள்

அதாவது 300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 100% sRGB கவரேஜ், 16:9 என்ற திரைவிகிதம் உள்ளிட்ட பல அசத்தலான டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் டேப்டாப். அதேபோல் கேம்கள் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் போன்றவற்றிக்கு தகுந்தபடி இந்த லேப்டாப் உருவாக்கப்பட்டுள்ளது.

 மென்பொருள் வசதி

மென்பொருள் வசதி

10வது ஜென் இன்டெல் கோர் பிராசஸர் மூலம் இந்த லேப்டாப் இயங்குகிறது. அதேபோல் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை M.2 NVMe PCIe 3.0 SSD ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய லேப்டாப். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அருமையான இயங்குதளம்

அருமையான இயங்குதளம்

இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் லேப்டாப் சாதனத்தில் விண்டோஸ் 11 இயங்குதள வசதி உள்ளது. மேலும் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 50Wh பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய லேப்டாப் மாடல். குறிப்பாக 9 மணிநேர வழக்கமான வேலை மற்றும் 9 மணிநேர வீடியோ பிளேபேக் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

Nothing Phone 1 பர்ஸ்ட் லுக் வெளியானதுக்கே இவ்ளோ சலசலப்புகளா! அசத்துமா? சொதப்புமா?Nothing Phone 1 பர்ஸ்ட் லுக் வெளியானதுக்கே இவ்ளோ சலசலப்புகளா! அசத்துமா? சொதப்புமா?

பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

குறிப்பாக 65W டைப்-சி சார்ஜர் இந்த லேப்டாப் சாதனத்தை 90 நிமிடங்களில் 100 சதவிகிதம் சார்ஜ் செய்கிறது. மேலும் ஆடியோவைப் பொறுத்தவரை, லேப்டாப் மேம்பட்ட டிடிஎஸ் ஒலி தொழில்நுட்பத்துடன் இரண்டு அடுக்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வெளிவந்துள்ளது.

Oppo Reno 8 Pro ஸ்மார்ட்போன் புது ஒன்பிளஸ் போனாக அறிமுகமா? என்னப்பா சொல்றீங்க? குழப்பம் வேண்டாம் விஷயம் இதான்Oppo Reno 8 Pro ஸ்மார்ட்போன் புது ஒன்பிளஸ் போனாக அறிமுகமா? என்னப்பா சொல்றீங்க? குழப்பம் வேண்டாம் விஷயம் இதான்

ஐஸ் ஸ்டார்ம் 1.0 கூலிங் சிஸ்டம்

ஐஸ் ஸ்டார்ம் 1.0 கூலிங் சிஸ்டம்

இதுதவிர ஐஸ் ஸ்டார்ம் 1.0 கூலிங் சிஸ்டம் ஆதரவைக் கொண்டுள்ளது புதிய இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் லேப்டாப். இது பயனர்கள் நீண்ட நேரம் கேமிங், வேலை போன்றவற்றில் ஈடுபடும்போது கூட வெப்பநிலையை குறைவாக வைத்திருக்கும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால்அருமையான மென்பொருள் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப்.

வாட்ஸ்அப் யூசர்கள் பெருமூச்சு! ஐபோனிற்கு வந்து ஒரு வருடம் கழித்து ஆண்ட்ராய்டுக்கு வந்த முக்கிய அம்சம்!வாட்ஸ்அப் யூசர்கள் பெருமூச்சு! ஐபோனிற்கு வந்து ஒரு வருடம் கழித்து ஆண்ட்ராய்டுக்கு வந்த முக்கிய அம்சம்!

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

இரண்டு யுஎஸ்பி 3.0 போர்ட்கள், 2 யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ 1.4 போர்ட், எஸ்டி கார்டு ரீடர், 3.5 மிமீ ஹெட்செட், மைக்ரோபோன் காம்போ ஜாக், வைஃபை 5 போன்ற பல இணைப்பு ஆதரவுகளுடன் இந்த இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் லேப்டாப் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..

வியக்கவைக்கும் விலை

வியக்கவைக்கும் விலை

  • கோர் ஐ3 + 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் லேப்டாப் விலை ரூ.29,900-ஆக உள்ளது.
  • கோர் ஐ3 + 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் லேப்டாப் விலை ரூ.32,900-ஆக உள்ளது.
  • கோர் ஐ5 + 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் லேப்டாப் விலை ரூ.39,900-ஆக உள்ளது.
  • கோர் ஐ5 + 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் லேப்டாப் விலை ரூ.44,900-ஆக உள்ளது.
  • கோர் ஐ7 + 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் லேப்டாப் விலை ரூ.49,900-ஆக உள்ளது.
  • இந்த புதிய லேப்டாப் வரும் ஜூன் 21-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும். அதபோல் சாம்பல், நீலம், பச்சை, சிவப்பு நிறங்களில் கிடைக்கும் இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் லேப்டாப். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டை பயன்படுத்த இந்த லேப்டாப் சாதனத்தை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Infinix InBook X1 Slim Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X