இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 நியோ லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.! இவ்ளோ கம்மி விலையா?
இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் கம்மி விலையில் InBook X1 Neo என்ற லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இன்பினிக்ஸ் லேப்டாப் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

எப்போது விற்பனை?
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 நியோ லேப்டாப் மாடலின் விலை ரூ.24,990-ஆக உள்ளது. பின்புஇந்த லேப்டாப் ஆனது வரும் ஜூலை 21 ஆம் தேதி மதியம் 12 மணிக்குபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமான டிஸ்பிளே
இன்புக் எக்ஸ்1 நியோ லேப்டாப் ஆனது 14-இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1,080×1,920 பிக்சல்ஸ், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.
பெரிய டிஸ்பிளேவுடன் இந்த லேப்டாப் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குவாட் கோர் பிராசஸர்
அதேபோல் Intel Celeron குவாட் கோர் என்5100 பிராசஸர் மூலம் இந்த இன்புக் எக்ஸ்1 நியோ லேப்டாப் இயக்கப்படுகிறது. மேலும் இதில் Intel UHD கிராபிக்ஸ் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
இன்பினிக்ஸ் நிறுவனம்.

எச்டி வெப் கேமரா
குறிப்பாக வீடியோகால் அழைப்புகளுக்கான எச்டி வெப் கேமரா ஆதரவு, பேக்லிட் கீபோர்டு, டூயல் மைக்ரோபோன், டிடிஎஸ் ஆதரவு போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் இந்த இன்புக் எக்ஸ்1 நியோ லேப்டாப் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி வசதி
இன்புக் எக்ஸ்1 நியோ லேப்டாப் மாடல் 50Whபேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த இன்புக் எக்ஸ்1 நியோ லேப்டாப்.

கனெக்டிவிட்டி
புளூடூத் 5.1, யுஎஸ்பி 3.0 போர்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ 1.4 போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய இன்புக் எக்ஸ்1 நியோ லேப்டாப். கண்டிப்பாக இந்த லேப்டாப் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி
இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி AMOLEDடிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல்ஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 20:9 ரேஷியோ போன்ற அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய போன்.
மேலும் XOS 10.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் போன்.

50எம்பி பிரைமரி கேமரா
இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா சென்சார் + 2எம்பி டெப்த் லென்ஸ் + ஏஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் மாடல்.

சிப்செட் எப்படி?
புதிய இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு மெமரி கார்டை பயன்படுத்த ஒருஎஸ்டிகார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
அதேபோல் இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது. இந்த சிப்செட் சில பிளாக்ஷிப் போன்களில்கூட இருக்கிறது.

இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி விலை?
இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி போனில் ; 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட்போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. மேலும்இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.14,999-ஆக உள்ளது. பின்பு ஸ்னோஃபால் ஒயிட் மற்றும் ஃபோர்ஸ் பிளாக் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுஇன்பினிக்ஸ் நோட் 12 5ஜி.


Click it and Unblock the Notifications








