Home
Computer

விரைவில் புதிய லேப்டாப் மாடலை அறிமுகம் செய்யும் இன்பினிக்ஸ் நிறுவனம்.!

ஒரு சில இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் லேப்டாப் மாடல்கள் சற்று குறைவான விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்புக் எக்ஸ்1

இன்புக் எக்ஸ்1

அதேபோல் இதனை உறுதி செய்யும் வகையில் இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 என்ற அறிமுகத்தை கண்ணோட்டமாகவெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் இன்டல் கோர் ப்ராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

புதிய லேப்டாப் கோர் i3,

மேலும் இந்நிறுவனத்தின் புதிய லேப்டாப் கோர் i3, கோர் i5, கோர் i7 என்ற மூன்று ப்ராசஸர் வேரியண்ட்களில் கிடைக்கும்என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த இன்புக் எக்ஸ்1 வெளிவரும்
என்று கூறப்படுகிறது.

ஸ்1 லேப்டாப் மாடல் ஆனது 14-இன்ச்

இன்புக் எக்ஸ்1 லேப்டாப் மாடல் ஆனது 14-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 16:9 என்ற திரைவிகிதம், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக நோபல் ரெட், எல்வ்ஸ் கிரீன், ஸ்டார்ஃபால் கிரே மற்றும் எலிகண்ட் பிளாக் போன்ற நிறங்களில் இந்த புதிய இன்புக் எக்ஸ்1 லேப்டாப்மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்புக் எக்ஸ்1 லேப்டாப் ஆனது

இந்த புதிய இன்புக் எக்ஸ்1 லேப்டாப் ஆனது விண்டோஸ் 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். பின்பு இதன் எடை 1.48 கிலோகிராம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுதவிர 55Whr பேட்டரி திறன் கொண்டுள்ளது இந்த லேப்டாப்.

ர்ட், இரண்டு யுஎஸ்பி 3.0

இரண்டு யுஎஸ்பி 2.0 போர்ட், இரண்டு யுஎஸ்பி 3.0 போர்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட்,SD கார்டு ரீடர் மற்றும் 2-in-1 ஹெட்ஃபோன் மற்றும் மைக் காம்போ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்புக் எக்ஸ்1 லேப்டாப் மாடல். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ

இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ

இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.95-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,460பிக்சல் தீர்மானம்,180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் போன்ற பல அமசங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ

இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வசதி உள்ளது. மேலும் XOS 7.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம்செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஸ்மார்ட்போனின்

இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ.குறிப்பாக இந்த சாதனத்தின உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். இதுதவிர எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் கேமரா அம்சங்களும் உள்ளன.

 5000 எம்ஏஎச் பேட்டரி

இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் புளூடூத், வைஃபை 802.11, 5ஜி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், ஒடிஜி, எஃப்எம் ரேடியோ உள்ளிட்ட பல ஆதரவுகள் இவற்றில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Infinix INBook X1 May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X