Home
Computer

முழுக்க முழுக்க இந்தியவிலேயே தயாராகும் புதிய டேப்லெட்!

By Karthikeyan
முழுக்க முழுக்க இந்தியவிலேயே தயாராகும் புதிய டேப்லெட்!

பெங்களூரைச் சேர்ந்த டிஜிட்டல் வேவ்ஸ் என்ற இந்திய நிறுவனம் தனது புதிய 7 இன்ச் டேப்லெட்டை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த டேப்லெட்டின் பெயர் டேப் ப்ளஸ் ரியோ ஆகும். இந்த டேப்லெட் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதாகும்.

இந்த ரியோ டேப்லெட் மிக சக்தி வாய்ந்த ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் வசதிகளைக் கொண்டுள்ளது. அதாவது இதன் 1ஜி ஹெர்ட்ஸ் எ9 ப்ராசஸர் இந்த டேப்லெட்டுக்கு சூப்பரான செயல்திறனை வழங்கும். மேலும் இந்த ரியோ டேப்லெட்டில் மாலி க்ராபிக்ஸ் ப்ராசஸரும் உள்ளதால் இதன் பயன்பாடு மிக அருமையாக இருக்கும்.

இந்த ரியோ டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் இது 5 பாய்ன்ட் தொடு வசதியுடன் கூடிய 7 இன்ச் திரையைக் கொண்டுள்ளது. இதன் மொத்த எடை 350 கிராம் மட்டுமே. இதன் மொத்த பரப்பு 203 x 120 x 13 மிமீ ஆகும். அதுபோல் இது ஆன்ட்ராய்டு 2.3 இயங்கு தளத்தில் இயங்குகிறது.

இதன் ப்ராசஸர் 1 ஜிஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் எ9 ஆகும். மேலும் இது 512 எம்பி மைக்ரோ எஸ்டி மெமரியைக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக இதன் மெமரியை 32ஜிபி வரை விரிவு படுத்த மைக்ரோ எஸ்டி கார்டும் உள்ளது. அதுபோல் சேட்டிங்கிற்காக இந்த டேப்லெட்டில் முகப்பு கேமராவும் உண்டு.

இந்த ரியோ டேப்லெட்டில் உள்ள 5 பாய்ண்ட் 7 இன்ச் தொடுதிரை ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் இதில் இன்பில்ட் ப்ளாஷ் 11 உயர் தரம் கொண்ட வீடியோ சாட் வசதி ஆகியவை இந்த டேப்லட்டின் மிக முக்கிய அம்சங்கள் ஆகும்.

இந்த டேப்லெட்டில் 4 ஸ்லைட் க்ராவிட்டி சென்சார்கள் உண்டு. அதுபோல் இதில் வைபை, ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி ஸ்லாட் உள்ளதால் தகவல் பரிமாற்றத்தை மிக வேகமாகச் செய்ய முடியும். தகவல் பரிமாற்றத்தை மிக வேகமாகச் செய்ய வேண்டும் என்றால் யுஎஸ்பி டோங்குளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் பேட்டரியை எடுத்துக் கொண்டால் இது 3000 மெகா ஹெர்ட்ஸ் பேட்டரி ஆகும். இந்த பேட்டரி ஒரு வருட உத்திரவாதத்துடன் வருகிறது.

தற்போது டிஜிட்டல் வேவ்ஸ் இந்த டேப்லெட்டை தனது நிறுவன அலுவலகம் மூலமாகவே ரூ.10,200க்கு விற்பனை செய்கிறது. மேலும் இந்த நிறுவனம் மிகவும் உயர்தர டேப்லெட்டுகளைத் தயாரித்து வெளியிடவும் முடிவெடுத்திருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X