Home
Computer

ஐஎப்எ விழாவை அலங்கரிக்கும் எச்பியின் புதிய அல்ட்ராபுக்குகள்

By Super
ஐஎப்எ விழாவை அலங்கரிக்கும் எச்பியின் புதிய அல்ட்ராபுக்குகள்

பெர்லினில் நடக்கும் ஐஎப்எ விழாவில் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ததன் மூலம் எச்பி நிறுவனம் தன்னுடைய அர்த்தமுள்ள பங்களிப்பை உறுதி செய்திருக்கிறது.

அதாவது இந்த ஐஎப்எ விழாவில் எச்பி இரண்டு புதிய அல்ட்ராபுக்குகளை அறிமுகம் செய்திருக்கிறது. விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வரும் இந்த அல்ட்ராபுக்குகளுக்கு என்வி எக்ஸ்2 ஹைப்ரீட் மற்றும் என்வி டச்ஸ்மார்ட் அல்ட்ராபுக் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன.

எச்பியின் இந்த இரண்டு புதிய அல்ட்ராபுக்குகளும் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகின்றன. குறிப்பாக என்வி எக்ஸ்2 ஹைப்ரீட் லேப்டாப்பை எடுத்துக் கொண்டு இது 11.6 இன்ச் அளவில் மிகத் துல்லியமான ஐபிஎஸ் திரையுடன் வருகிறது.

மேலும் தனியாக பிரித்து எடுக்கக்கூடிய கீபோர்டு, இன்டல் ஆட்டம் க்ளவர் ட்ரையல் சிபியு, 8 எம்பி கேமரா 32 மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதிகள், என்எப்சி மற்றும் 3ஜி இணைப்பு ஆகிய வசதிகளை இந்த லேப்டாப்பில் பார்க்கலாம். மேலும் இந்த லேப்டாப் 10 மணி நேர இயங்கு நேரத்துடன் வருகிறது.

அதே நேரத்தில் என்வி டச்ஸ்மார்ட் அல்ட்ராபுக் 14 இன்ச் அளவில் எச்டி மல்டி டச் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இதன் பேட்டரி இந்த லேப்டாப்பிற்கு 8 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் 2ஜிபி மெமரியுடன் கூடிய எஎம்டி கார்டையும் இந்த லேப்டாப் வழங்குகிறது.

மேற்சொன் இந்த இரண்டு அல்ட்ராபுக்குகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X