Home
Computer

ஐ.எஃப்.ஏ 2019 : மிரட்டலான ஏசர் பிரிடேட்டர் கேமிங் லேப்டாப் & கேமிங் சேர் அறிமுகம்.!

ஐ.எஃப்.ஏ 2019 நகழ்ச்சியில் ஏசர் நிறுவனம் தனது ஏசர் பிரிடேட்டர் லேப்டாக் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனங்கள் அனைத்தும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலையும் சற்று உயர்வாக இருக்கிறது

விலையும் சற்று உயர்வாக இருக்கிறது

தற்சயம் ஏசர் பிரிடேட்டர் Triton 300 கேமிங் லேப்டாப்,ஏசர் பிரிடேட்டர் Triton 500 லேப்டாப் மற்றும் த்ரோனோஸ் ஏர் கேமிங் சேர் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். குறிப்பாக இந்த சாதனங்களை அனைத்து உயர்தொழில்நுட்பம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனங்களின் விலையும் சற்று உயர்வாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசர் பிரிடேட்டர் Triton 300 கேமிங் லேப்டாப்:

ஏசர் பிரிடேட்டர் Triton 300 கேமிங் லேப்டாப்:

ஏசர் பிரிடேட்டர்Triton 300 கேமிங் லேப்டாப் சாதனம் பொதுவாக 15.6-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு 9-வது ஜென் இன்டெல் கோர் ஐ9 பிராசஸர்,என்விடியா ஜியிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1650 ஜி.பீ.யூ ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

ஏசர் பிரிடேட்டர் Triton 300 கேமிங் லேப்டாப் சேமிப்பு

இந்த லேப்டாப் மாடல் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது. மேலும் ஏசர் பிரிடேட்டர் Triton 300 கேமிங் லேப்டாப்-ன் எடை மதிப்பு 2.3கிலோவாக
உள்ளது. பின்பு இந்த சாதனம் வைஃபை 6 எக்ஸ் 1650 ஆதரவு மற்றும் கில்லர் ஈதர்நெட் உடன் வருகிறது.குறிப்பாக RGB லைட்டிங் கீபோர்டு, 4 வது ஜெனரல் ஏரோபிளேட் 3 டி மெட்டல் ஃபேன் தொழில்நுட்பம் மற்றும் கூல்பூஸ்ட் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் உள்ளதால் பயன்படுத்துவதற்கு இந்த சாதனம் அருமையாக இருக்கும். இந்த சாதனத்திற்கு வேவ்ஸ் என்எக்ஸ் மாடலிங் பயன்படுத்தி ஆடியோ வழங்கப்படுகிறது.

ஏசர் பிரிடேட்டர் Triton 500 லேப்டாப்:

ஏசர் பிரிடேட்டர் Triton 500 லேப்டாப்:

ஏசர் பிரிடேட்டர் Triton 500 லேப்டாப் மாடல் பொதுவாக 15.6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 9-வது ஜென் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின்வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஏசர் பிரிடேட்டர் த்ரோனோஸ் ஏர் கேமிங் சேர்

ஏசர் பிரிடேட்டர் த்ரோனோஸ் ஏர் கேமிங் சேர்

பிரிடேட்டர் த்ரோனோஸ் ஏர் கேமிங் சேர் பொறுத்தவரை ஒரு புதுமையான படைப்பு. இந்த ஏர் கேமிங் சேர்-ஐ180 டிகிரி வரை சரிசெய்யலாம் மற்றும் சரிசெய்யக்கூடிய விசைப்பலகை மற்றும் மவுஸ், டீல் நீல விளக்குகள் ஆகியவை கொண்டு வெளிவந்துள்ளது.

ஏசர் பிரிடேட்டர் த்ரோனோஸ் ஏர் கேமிங் சேர் மூன்று டிஸ்பிளேவை ஆதரிக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, பின்பு ஹெட்செட், யூ.எஸ்.பி ஹப் மற்றும் கேமரா போன்ற பல்வேறு உள்ளடங்களை கொண்டு இந்த கேமிங் சேர் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அட்டகாசமான விலை:

அட்டகாசமான விலை:

ஏசர் பிரிடேட்டர் Triton300 கேமிங் லேப்டாப் மற்றும் ஏசர் பிரிடேட்டர் த்ரோனோஸ் ஏர் கேமிங் சேர் சாதனங்கள் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரும். பின்பு ஏசர் பிரிடேட்டர் Triton 500 லேப்டாப் மாடலின் விலை ரூ.1,65,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
IFA 2019: Acer brings gaming laptops and unique gaming chair!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X