Home
Computer

ஒயர்லெஸ் சார்ஜர் டேப்லட்டினை வழங்கும் ஐசிஇ எக்ஸ்!

By Super

ஒயர்லெஸ் சார்ஜர் டேப்லட்டினை வழங்கும் ஐசிஇ எக்ஸ்!
வயர்லெஸ் சார்ஜர் வசதியுடன் புதிய டேப்லட்டை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஐசிஇ எக்ஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம். லேப்டாப், டேப்லட் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு சார்ஜ் செய்வது ஒரு பெரிய வேலை என்று தான் சொல்ல வேண்டும்.

அதுவும் ஒயர் கொண்ட சார்ஜர்கள் என்றால் பயணம் செய்யும் தருணங்களில் சார்ஜ் செய்வது இன்னும் சிரமம். இதனால் புதிய ஒயர்லெஸ் சார்ஜர் வசதி கொண்ட டேப்லட்டினை வழங்க திட்டமிட்டுள்ளது ஐசிஇ எக்ஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்.

ஒயர்லெஸ் சார்ஜர் வசதி கொண்ட டேப்லட்டினை வழங்குவதாக கூறும் ஐசிஇ எக்ஸ் நிறுவனம், ஐசிஇ எக்ஸ்ட்ரீம்-II என்ற பெயரில் டேப்லட்டினை அறிமுகமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி ஒயர்லெஸ் டேப்லட்டை வெற்றிகரமாக ஐசிஇ எக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தால், வாடிக்கையாளர்களுக்கு அது மிகவும் பயனளிக்கும் ஒன்றாக இருக்கும்.

ஒயர்லெஸ் சார்ஜர் கொண்ட டேப்லட்டை வழங்க திட்டமிட்டிருப்பது மட்டுமல்லாமல், ஐசிஇ எக்ஸ்ட்ரீம் என்ற ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட டேப்லட்டினையும் அறிமுகம் செய்கிறது ஐசிஇ எக்ஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்.

எங்கு சென்றாலும் எளிதாக எடுத்து செல்வதற்கு வசதியாக இருக்கும் இந்த டேப்லட்டினை திரும்ப திரும்ப பயன்படுத்தவும் ஆர்வமாக இருக்கும். இளைஞர்களை எளிதாக ஈர்க்கும் வகையில் இந்த டேப்லட்டின் வடிவமைப்பும், தொழில் நுட்பமும் இருக்கும்.

இந்த டேப்லட் 7 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும். கையில் வைத்து பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் இந்த திரை, டபிள்யூவிஜிஏ தொழில் நுட்பத்தினை வழங்கும். இதனால் காட்சிகளை தெளிவாக பார்க்க முடியும். தொடுதிரை வசதி கொண்ட இந்த திரை 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொண்டது.

2ஜி, 3ஜி போன்ற வசதிகளை பெற எக்ஸ்டர்னல் டோங்கில் சப்போர்ட்டும் இந்த டேப்லட்டில் பெறலாம். இதில் 2 மெகா பிக்ஸல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. 8ஜிபி இன்டர்னல் மெமரி வசதி கொண்ட இந்த டேப்லட்டில், 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். வைபை வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த டேப்லட்டினை ரூ. 6,999 விலையில் பெற முடியும்.

ஆனால் இந்த ஐசிஇ எக்ஸ் நிறுவனம் இந்திய மக்களுக்கு அவ்வளவு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், குறிப்பிட்ட சில எக்ட்ரானிக் சாதன ஸ்டோர்களில் சிறந்த தொழில் நுட்பத்தினை வழங்கும் இந்த ஐசிஇ எக்ஸ்-7 டேப்லட்டினை பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X