Home
Computer

ஐசிஎஸ் அப்டேட் பெறும் ஐபெரி டேப்லெட்!

By Karthikeyan
ஐசிஎஸ் அப்டேட் பெறும் ஐபெரி டேப்லெட்!

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டைத் தயாரிக்கும் எல்லா நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளுக்கு ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் (ஐசிஎஸ்) இயங்கு தளத்தை மிக வேகமாக அப்டேட் செய்து வருகின்றன. அந்த வகையில் ஐபெரி நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு டேப்லெட்டான ஐபெரி பிடி07ஐக்கு ஐசிஎஸ் அப்டேட்டை வழங்கி வருகிறது. அதன் மூலம் இந்த ஐபெரி டேப்லெட் மேலும் புதுப் பொலிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது இந்த அப்க்ரேட் மூலம் இந்த டேப்லெட்டின் கேமரா அப்ளிகேசன் மற்றும் பேட்டரி பேக்கப் ஆகியவை மேம்பாடு அடையும். அதோடு கேலரி அப்ளிகேசன் மற்றும் பன்முக செயல்பாடு போன்றவற்றில் இந்த டேப்லெட் இன்னும் சிறப்பாக செயல்படும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே இந்த டேப்லெட் 800x480 பிக்சல் ரிசலூசன் கொண்ட 7 இன்ச் டிஸ்ப்ளே, 512 எம்பி ரேம், 1 ஜிஹெர்ட்ஸ் எஎம் கோர்டெக்ஸ் எ8 ப்ராசஸர், 4ஜிபி சேமிப்பு, சூப்பரான முகப்பு கேமரா, வைபை மற்றும் 3ஜி டோங்குள்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கிறது.

இந்த அப்டேட் மூலம் இந்த மலிவு விலை டேப்லெட்டின் விற்பனை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபெரி டேப்லெட்டை வைத்திருப்போது நேரடியாக அப்க்ரேட் செய்யலாம். அதாவது இந்த அப்க்ரேட் பைலை எஸ்டி கார்டு மூலம் இந்த டேப்லெட்டில் இணைக்க வேண்டு. பின் ஐபெரியின் வெப்சைட்டுக்குள் சென்று அப்டேட் லிங்கை க்ளிக் செய்தால் போதும். டேப்லெட் மிக எளிதாக இந்த அப்டேட்டைப் பெற்றுவிடும்.

ஐபெரி இந்த அப்டேட்டை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கினாலும் இந்த டேப்லெட்டின் விலையை அதிகரிக்கவில்லை. அதாவது ரூ.8000க்கே இந்த டேப்லெட்டை விற்பனை செய்கிறது. அதனால் இந்த டேப்லெட்டின் விற்பனை இன்னும் அதிகமாகும் என்பதில் ஐயமில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X