ரூ.7,000 விலையில் ஐபெரியின் புதிய டேப்லட்

By Super
|
ரூ.7,000 விலையில் ஐபெரியின் புதிய டேப்லட்
இந்திய மார்க்கெட்டில் பீட்டெல்லின் மேஜிக் டேப்லெட் மலிவு விலை டேப்லெட்டாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதைவிட குறைந்த விலையில் புதிய டேப்லெட்டை ஹாங்காங்கை சேர்ந்த ஐபெரி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய டேப்லெட்டை ரூ.7,000 விலையில் அறிமுகப்படுத்த இருப்பதால் மற்ற டேப்லெட் விற்பனையாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

பீட்டெல் மேஜிக்கில் ரியர் மற்றும் முகப்பு கேமராக்களும், 3ஜி சப்போர்ட்டும், 1ஜிஹெர்ட்ஸும் உள்ளன. குறிப்பாக இந்த டேப்லட் சக்கப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த டேப்லட்டைப் பெற வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.

இந்த நேரத்தில் இந்தியாவிற்கு புதிய நிறுவனமான ஐபெரி 7இன்ச் மற்றும் 10 இன்ச் ஆகிய அளவுகளில் மிக குறைந்த விலையில் டேப்லட்டுகலை களமிறக்க இருக்கிறது. இந்த 7 இன்ச் டேப்லட் ரூ.6,990க்கு வரவிருக்கிறது.

இது ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்ப்ரீடு ஓஎஸ்ஸைக் கொண்டிருக்கும். மேலும் இந்த 7 இன்ச் டேப்லட் 4ஜிபி இன்பில்ட் சேமிப்பு வசதியுடன் 3ஜி யுஎஸ்பி மோடம் சப்போர்ட் மற்றும் எச்டிஎம்ஐ அவுட்புட்டும் கொண்டிருக்கிறது. மேலும் இதன் மெமரியை மைக்ரே எஸ்டி கார்ட் மூலம் 32ஜிபி வரை விரிவு படுத்தலாம். மேலும் இது எஆர்எம் கோர்டெக்ஸ் எ8 1.2ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரும் 512எம்பி டிடிஆர்2 ரேமும் கொண்டுள்ளது.

இதன் 7 இன்ச் ட்ஸ்ப்ளே 800X480 பிகஸல் ரிசலூசனை வழங்குகிறது. அதுபோல் ஐபெரி பிடி07 ப்ளாஷ் 10.3 சப்போர்ட்டும் கொண்டுள்ளது. இது ஓபன்ஜிஎல் இஸ்2.0 மற்றும் கிரோ பேஸ்டு மோஷன் சென்சார் கொண்டுள்ளதால் இதில் வீடியோ கேம் மிக அற்புதமாக இருக்கும்.

ஐபெரி பிடி10 டேப்லட்டை எடுத்துக் கொண்டால் அது 10 இன்ச் திரையுடன் 1024X600 பிக்சல் ரிசலூசனுடன் வருகிறது. இது 1.2ஜிஹெர்ஸ் ப்ராசஸர் மற்றும் 512எம்பி டிடிஆர்2 ரேம் கொண்டிருக்கிறது. மேலும் இது ஆண்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்ப்ரீடு ஓஎஸ்ஸை கொண்டிருக்கிறது.

இதில் 4ஜிபி இன்பில்ட் சேமிப்புடன் மைக்ரோ எஸ்டி கார்டுடன் மூலம் 32ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய வசதியும் உள்ளது. இதன் எச்டிஎம்ஐ ஆவுட்புட் சிறப்பாக உள்ளது. அதுபோல் இதன் மினி யுஎஸ்பி போர்ட் மூலம் பென்ட்ரைவ் மற்றும் பிற டிவைஸ்களை இணைக்க முடியும். மேலும் இதில் 3ஜி/2ஜி சப்போர்ட்டும் உண்டு.

பிடி07னைப் போல பிடி10ம் வீடியோ கேம் வசதியை வாரி வழங்குகிறது. அதாவது இது ஓபன்ஜிஎஸ் இஎஸ் 2.0 மற்றும் கிரோ பேஸ்ட் மோஷன் சென்சார் கொண்டிருப்பதால் வீடியோ கேம் பட்டையைக் கிளப்பும். பிடி-10ன் விலை ரூ.14,990க்கு கிடைக்கும். பீட்டலின் மேஜிக்கை வீழத்துமா இந்த ஐபெரியின் டேப்லட்டுகள்? பொறுத்திருந்து பார்ப்போம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X