Home
Computer

புதிய அப்டேஷனில் கலக்கும் ஐபால் டேப்லட்!

By Super

புதிய அப்டேஷனில் கலக்கும் ஐபால் டேப்லட்!
புதிய ஸ்லைடு ஐ-7218 டேப்லட்டிற்கு ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனை வழங்க உள்ளது ஐபால் நிறுவனம்.

உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட பல புதிய டேப்லட்கள் ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷன் வசதியினை பெற இருக்கிறது. 7 இஞ்ச் திரை கொண்ட இந்த டேப்லட் தகவல்களை தெளிவாக கொடுக்கும்.

ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கும் இந்த டேப்லட், ஐஸ் கிரீம் சான்ட்விச் 4.0 ஆப்பேரட்டிங் சிஸ்டம் அப்டேஷனை பெற உள்ளது.

இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-8 சிபியூ பிராசஸரையும் வழங்கும். இந்த டேப்லட் டியூவல் கேமரா வசதியினை கொண்டது. 2 மெகா பிக்ஸல் மற்றும் விஜிஏ கேமராவினையும் வழங்கும்.

8 ஜிபி வரை இன்டர்னல் மெமரியினை கொண்ட இந்த டேப்லட்டின் எக்ஸ்டர்னல் மெமரி வசதியினை 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும். இதன் 4,400 எம்ஏஎச் பேட்டரி வசதி 5 மணி நேரம் வீடியோ வசதிக்கும், 6.5 மணி நேரம் ஸ்டான்-டைம் வசதிக்கும் எளிதாக சப்போர்ட் செய்யும்.

புளூடூத், வைபை போன்ற தொழில் நுட்ப வசதிகள் மட்டும் இல்லாமல், இதில் 3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்தினையும் பயன்படுத்தலாம். இதில் எச்டிஎம்ஐ போர்ட் தொழில் நுட்பம் உள்ளதால், டிவியுடன் எளிதாக இணைக்க முடியும்.

இந்த ஐபால் ஐ-7218 டேப்லட் ரூ.11,999 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X