Home
Computer

புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தியது ஐபால்: விளம்பர தூதராக ஹிருத்திக்

By Super
புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தியது ஐபால்: விளம்பர தூதராக ஹிருத்திக்
இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம் என்று நாம் நினைத்தால் அது தவறாகும் ஏனெனில் இன்னும் புதிதாக பார்ப்பதற்கென்றே ஐபால் டேப்லட் வருகிறது. ஐபாலின் இந்த புதிய டேப்லட்டின் பெயர் ஐபால் ஸ்லைடு ஆகும். பாலிவுட் நாயகன் ஹிருத்திக் ரோஷன் இதன் வியாபார தூதுவராக செயல்படுவார்.

ஐபால்ஸ்லைடு 1ஜிஹர்ட்ஸ் எஆர்எம் கோர்ட்டக்ஸ் எ8 ப்ராசஸர் கொண்டு இருக்கிறது. இதன் 7இன்ச் கப்பாசிட்டிவ் தொடுதிரை இதற்கு சிறப்பான அறிமுகத்தை வழங்குகிறது. மேலும் அது ஆண்ட்ராய்டு வி2.3 ஜிஞ்சர்ப்ரீட் டாப்லட் ஆகும். இதன் 8ஜிபி எக்ஸ்டர்னல் மெமரியை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும்.

தகவல் பரிமாற்றத்திற்காக இது வைபை மற்றும் 3ஜி டோங்குள் சப்போர்ட் கொண்டுள்ளது. மேலும் இது யுஎஸ்பி போர்ட் கொண்டுள்ளதால் பென்ட்ரைவ் முதல் அனைத்து டிவைஸ்களையும் இதில் இணைக்கலாம். அதன் மூலம் விரைவாகவும் இதில் வேலை செய்யலாம். மேலும் இதன் யுஎஸ்பி மூலம் நாம் இதை கணனியோடு எளிதாக இணைக்க முடியும். அதோடு இதில் எச்டிஎம்ஐ சப்போர்ட் உள்ளதால் இதில் நாம் சிறந்த முறையில் வீடியோக்களைப் பார்க்க முடியும்.

ஐபால்ஸ்லைடு ப்ளூடூத் டவைஸ்களான ஹெட்செட், கீபோர்ட் மற்றும் ஹெட்செட்களை இணைக்க அனுமதிக்கிறது. இதன் மின்திறனைப் பார்த்தால் அது அபாரமான திறன்கொண்ட 4400 மெகா ஹர்ட்ஸ் லித்தியம் அயன் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் தொடர்ச்சியாக 6.5 மணி நேரம் மீயூசிக் ப்ளேபேக்கையும் 5 மணி நேரம் வீடியோ ப்ளேபேக்கையும் இயக்க முடியும். இதன் ரியர் 2 மெகா பிக்ஸல் கேமாரா சற்று குறைபாடாக தெரிந்தாலும் இதில் தரமான படங்களை எடுக்க முடியும்.

மேலும் இதன் எச்டி வீடியோ கம்பாட்டிபிலிட்டி மற்றும் 3டி விளையாட்டு வசதிகள் நமக்கு பரம திருப்தியை ஏற்படுத்தும். ஐபாலின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் அதன் விசுவல் தேடல், குரல் மற்றும் செயல் அறியும் திறன், வெப் ப்ரவுசர்களை எளிதாக இயக்கும் தன்மை, இமெயி்ல் சாட்டிங் சேவைகள், சோஷியல் நெட்வொர்க்கிங் சேவைகள், இபுக்குகள் மற்றும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களை பதிவிரக்கம் செய்யும் வசதி ஆகியவையாகும். இந்த வசதிகளைப் பார்க்கும் போது நமக்கே மயக்கம் வருகிறது.

ஐபாலின் அடுத்த சிறப்பு என்னவென்றால் இதில் நாம் எம்எஸ் வேர்ட், எக்ஸல், பவர்பாய்ண்ட் மற்றும் பிடிஎப் பைல்களை இயக்க முடியும். ஐபாலின் இயக்குநர் திரு. சந்தீப் பரசராமபூரியா கூறும் போது ஸ்டைலிலும், பெர்பெக்சனிலும், புதுமையிலும், செயல்திறனிலும் ஐபால் ஸ்லைடை ஒத்திருப்பதால் பாலிவுட் நாயகன் ஹிருத்திக் ரோஷனை அதன் வர்த்தக தூதராக தேர்ந்தெடுத்ததாக கூறுகிறார்.

அது போல் ஹிருத்திக் ரோஷனும் ஐபாலின் வளர்ச்சியைப் பார்த்து மலைத்துப் போவதாகவும் மற்றும் இதன் வர்த்தக தூதராக இருப்பதில் பெருமைப்படுவதாகவும் கூறகிறார். இந்த ஐபால்ஸ்லைடு விரைவில் இந்தியாவிற்கு வரும் என்று நம்பலாம் மேலும் அதன் விலை ரூ.14,000க்குன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X