Home
Computer

இந்திய சந்தையில் ஐபாலின் புதிய ஆன்ட்ராய்டு மலிவு விலை டேப்லெட்

By Karthikeyan
இந்திய சந்தையில் ஐபாலின் புதிய ஆன்ட்ராய்டு மலிவு விலை டேப்லெட்

இந்திய டேப்லெட் சந்தையில் ஐபால் நிறுவனம் ஒரு புதிய ஆன்ட்ராய்டு மலிவு விலை டேப்லெட்டைக் களமிறக்கி இருக்கிறது. ஐபால் ஸ்லைட் 3ஜி 7334 என்று அழைக்கப்படும் இந்த டேப்லெட் ரூ.10,999க்கு விற்கப்படுகிறது. இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குகிறது.

டூவல் சிம் வசதி கொண்ட இந்த டேப்லெட் எப்எம் ட்ரான்ஸ்மிட்டர் வசதியுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்லைட் டேப்லெட் கோர்டெக்ஸ் எ9 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர், 2.0எம்பி பின்பக்கக் கேமரா மற்றும் ஒரு விஜிஎ முகப்புக் கேமரா போன்றவற்றைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த டேப்லெட்டின் 7 இன்ச் எச்டி டபுள்யுஎஸ்விஜிஎ கப்பாசிட்டிவ் தொடுதிரை மிகவும் துல்லியமாக இருக்கிறது.

இந்த டேப்லெட் ஒரு டேப்லெட் பிசியாக செயல்படும். ஏனெனில் அதற்கான டூவல் சிம் மற்றும் எப்எம் ட்ரான்ஸ்மிட்டர் போன்ற வசதிகளை இந்த டேப்லெட் வைத்திருக்கிறது என்று ஐபாலின் தலைவர் சந்தீப் பரசுராம்புரியா கூறுகிறார். மேலும் இந்த டேப்லெட்டில் இருக்கும் எச்டி திரை, டூவல் கேமரா, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் போன்ற வசதிகள் கண்டிப்பாக வாடிக்கையாளர்களை மயக்கும் என்று நம்பலாம்.

இந்த டேப்லெட்டில் இருக்கும் 8ஜிபி மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். மேலும் இந்த டேப்லெட்டில் வைபை, யுஎஸ்பி போன்ற வசதிகளும் உண்டு. அதோடு இந்த டேப்லெட்டில் வாட்ஸ்அப், பேஸ்புக், நிம்பஸ், சொமாட்டோ, ஐபிஎன்லைவ், மனி கண்ட்ரோல், மற்றும் கிரிக்கெட் நெக்ஸ்ட் போன்ற அப்ளிகேசன்களும் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X