தனது முதல் டியூவல் கோர் டேப்லட்டை வழங்கும் ஐபால்!

டேப்லட் சந்தையில் புதிதாக கால்பதிக்கும் இந்த டேப்லட், என்னென்ன வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்பது பற்றிய விவரத்தினையும் இங்கே பார்க்கலாம்.
இந்த ஐ-9702 ஸ்லைடு பற்றி முதலில் கூற வேண்டிய விஷயம் இதன் திரை. இந்த ஐபாலின் புதிய டேப்லட் வாடிக்கையாளர்களுக்கு 9.7 இஞ்ச் திரையினை வழங்கும். இதன் திரையின் மூலம் 1024 X 768 என்ற சிறப்பான துல்லியத்தினை பெறலாம். சாம்சங் நிறுவனத்தின் 7 இஞ்ச் திரை கொண்ட கேலக்ஸி டேப்-2 டேப்லட் 1024 X 768 திரை துல்லியத்தினையும் கொடுக்கும்.
டியூவல் கோர் பிராசஸர் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்கும் இந்த டேப்லட், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸரினையும் கொடுக்கும்.
இதில் 2 மெகா பிக்ஸல் கொண்ட மெயின் கேமராவினையும், முகப்பு கேமராவினையும் எளிதில் பெற முடியும். இந்த டேப்லட் கொடுக்கும் 8,000 எம்ஏஎச் பேட்டரியினையினால், 7 மணி நேரம் பேட்டரி பேக்கப் வசதியினை பெறலாம்.
இதன் இன்பில்டு மெமரி வசதியாக 8 ஜிபி வரை பயன்படுத்த முடியும். இது மட்டும் அல்லாது மெமரி வசதியினை 32 ஜிபி வரையில் விரிவுபடுத்தி கொள்ள இதன் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட்களும் சிறப்பாக துணை புரியும். இந்த டேப்லட்டின் விலையை குறிப்பாக சொன்னால், ரூ. 14,999 விலையில் பெறலாம். இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications