சாம்சங் டேப்லட்டினை முந்தி கொள்ள பார்க்கும் ஐபால்!

By Super
|

சாம்சங் டேப்லட்டினை முந்தி கொள்ள பார்க்கும் ஐபால்!
வாடிக்கையாளர்களால் அதிகம் பேசப்பட்ட சாம்சங் கேலக்ஸி டேப்-2 டேப்லட்டுக்கு போட்டியாக வேறெந்த டேப்லட் இருக்கும் என்பது பற்றி ஒரு சிறிய ஒப்பீடு. இதில் புதிதாக அறிமுகமாகும் ஐபால் ஐஸ்லைடு ஐ-9072 டேப்லட் இந்த இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கேலக்ஸி டேப்-2 மற்றும் ஐபால் ஐஸ்லைடு ஐ-9072 டேப்லட்களின் தொழில் நுட்பம் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஐஸ்லைடு ஐ-9072 டேப்லட் அதிகபட்சமாக 9.7 இஞ்ச் ஐபிஎஸ் திரை வசதியினை கொண்டதாக இருக்கும். இதில் 1024 X 786 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். இந்த துல்லியத்தினால் எந்த தகவல்களையும் தெளிவாக பெற முடியும். கேலக்ஸி டேப்-2 டேப்லட் 7 இஞ்ச் திரையினை வழங்கும். ஐபாலின் இந்த புதிய டேப்லட்டின் திரையை விடவும், கேலக்ஸி டேப்-2 டேப்லட்டின் திரை சற்று சிறிய வித்தியாசம் கொண்டதாக தெரிகிறது. இதனால் கேலக்ஸி டேப்-2 டேப்லட்டின் திரை துல்லியமும் சற்று குறைந்த அளவில் 1024 X 786 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்குகிறது.

ஐஸ்லைடு ஐ-9072 டேப்லட் 1.5 ஜிகாஹர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரினையும், கேலக்ஸி டேப்-2 டேப்லட் 1 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரினையும் வழங்கும். இந்த டேப்லட்களின் இயங்குதளம் சிறப்பாக இயங்க இந்த பிராசஸர் சிறப்பான முறையில் ஒத்துழைக்கும்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் ஒற்றுமை என்னவென்றால், ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தினை கொண்டதாக இருக்கும். மெமரி வசதியினை பொருத்தளவில் 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியை இந்த ஐபால் டேப்லட்டில் பெறலாம். கேலக்ஸி டேப்-2 டேப்லட் 8 ஜிபி மற்றும் 16 ஜிபி வரை மெமரி வசதியினை கொண்டதாக இருக்கும். இந்த 2 டேப்லட்களிலும் 32 ஜிபி வரை கூடுதல் மெமரி ஸ்டோரேஜ் வசதியினை பெற முடியும்.

பேட்டரி வசதியில் கேலக்ஸி டேப்-2 டேப்லட்டினை மிஞ்சி நிற்கிறது ஐபால் டேப்லட். ஐபால் ஐஸ்லைடு ஐ-9072 டேப்லட் 8,000 எம்ஏஎச் பேட்டரியை கொடுக்கும். கேலக்ஸி டேப்-2 டேப்லட் 4,000 எம்ஏஎச் பேட்டரியின் ஆற்றலை வழங்கும். கேலக்ஸி டேப்-2 டேப்லட் மற்றும் கேலக்ஸி டேப்-2 டேப்லட்டில் வைபை வசதியினை சிறப்பாக பயன்படுத்த முடியும்.

சாம்சங் கேலக்ஸி டேப்-2 டேப்லட் ரூ. 19,300 விலை கொண்டதாகவும், ஐபால் ஐஸ்லைடு ஐ-9702 டேப்லட் ரூ. 14,999 விலை கொண்டாதகவும் இருக்கும். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X