மலிவு விலையில் வெளியாகும் ஐபால் காம்ப்புக் மெரிட் ஜி9..

இந்த காம்ப்புக் மெரிட் G9 மெல்லிய எடை கொண்ட லேப்டாப் எனவும், கோபால்ட் ப்ளூ-ல் செய்யப்பட்டது எனவும் ஐபால் நிறுவனம் கூறுகிறது.

By GizBot Bureau
|

பிப்ரவரி மாதம் ஐபால் காம்ப்புக் பீரிமியோ v2.0 வை அறிமுகப்படுத்திய பின்பு , இந்த உள்நாட்டு தொழில்நுட்ப பிராண்ட் தற்போது மெரிட்G9 காம்ப்புக்கை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இன்டெல் சிலிரான் N3350 இயக்கியில் இயங்கும் இந்த லேப்டாப், விண்டோஸ்10 இயங்குதளத்தையும், 6மணி நேரம் தாக்குபிடிக்கும் பேட்டரியையும் கொண்டுள்ளது. பீரிமியோ V2.o வை விட மலிவு விலையில் கிடைக்கும் இந்த ஐபால் காம்ப்புக் மெரிட் G9 , இந்தியா முழுவதும் ரூ13,999 என்ற அதிரடி விலையில் கிடைக்கிறது.

மலிவு விலையில் வெளியாகும் ஐபால் காம்ப்புக் மெரிட் ஜி9..


இந்த காம்ப்புக் மெரிட் G9 மெல்லிய எடை கொண்ட லேப்டாப் எனவும், கோபால்ட் ப்ளூ-ல் செய்யப்பட்டது எனவும் ஐபால் நிறுவனம் கூறுகிறது. விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இயங்கும் இந்த லேப்டாப்-ல் 11.9இன்ச்(1366×768) எச்.டி திரையும், அது டச்பேட் மற்றும் மல்டிபேட் செயல்பாடுகளையும் கொண்டது.

ஏற்கனவே குறிப்பிட்ட படி, காம்ப்புக் மெரிட் G9 2.4GHz இன்டெல் செலிரான் N335 இயக்கியும், 2GB DDR3 ரேம் வசதியும் கொண்டது. மேலும் இதில் 32GB உள்ளார்ந்த சேமிப்புதிறன் மற்றும் 128GB வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்.டி கார்டு வசதியும் உள்ளது. கூடுதலாக சேமிப்புத்திறன் தேவைப்பட்டால் 1TBவரை HDD/SSD வசதியும் வழங்கப்படுகிறது.

மலிவு விலையில் வெளியாகும் ஐபால் காம்ப்புக் மெரிட் ஜி9..

இரண்டு ஸ்பீக்கர்
இந்த ஐபால் காம்ப்புக் மெரிட் G9-ல் 0.3MB வெப் கேமரா, இரண்டு ஸ்பீக்கர் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளது. இதில் உள்ள 5000mAh லீ-பாலிமர் பேட்டரி 6 மணி நேரம் தாக்குபிடிக்ககூடியது என்கிறது ஐபால். மேலும் வீடியோக்கள் பாரக்கும் போது 7 மணி நேரமும், ஆடியோக்களுக்கு மட்டும் 20 மணி நேரமும் தாக்குபிடிக்கக்கூடியது. இணைப்பு வசதிகளை பொறுத்தவரை, ப்ளூடூத்4.0, இன்டெல் டூயல் பேண்ட் ஒயர்லெஸ் ஏசி3165, HDMI v1.4a போர்ட், 2.0&3.0 யூ.எஸ்.பி போர்ட்கள் உள்ளன.இந்த லேப்டாப்பின் வடிவமைப்பை பொறுத்தவரை 30×20.3×2.5cm அளவுகளில், 1.1கிலோ எடையும் கொண்டது.

மலிவு விலையில் வெளியாகும் ஐபால் காம்ப்புக் மெரிட் ஜி9..


இந்த ஐபால் காம்ப்புக் மெரிட் G9 அனைவருக்கும் பொருந்தும் வகையிலும், தினசரி கணிணி செயல்பாடுகளை செய்வதற்கு ஏதுவாகவும், வடிவமைப்பு மற்றும் பீரிமியம் செயல்பாடுகளை நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர்தர தோற்றம் மற்றும் செயல்பாடு ஒருங்கே அமைந்த இது, தினசரி நடவடிக்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. என்கிறார் ஐபாலின் சி.ஈ.ஓ மற்றும் இயக்குநர் சந்தீப் பரஸ்ராம்புரியா.
மலிவு விலையில் வெளியாகும் ஐபால் காம்ப்புக் மெரிட் ஜி9..


ஐபால் காம்ப்புக் பீரிமியோ v2.0
இந்தாண்டின் துவக்கத்தில் வெளியான காம்ப்புக் பீரிமியோ வின் விலை இதை விட சற்று அதிகமாக ரூ21,999ஆகும். இது டச்பேட், மல்டிடச் செயல்பாடு போன்ற வசதிகளுடன் வந்தது. மேலும் இன்டெல் அப்பல்லோ லேக் N4200 பென்டியம் குவாட் கோர் இயக்கியுடன், 4GB DDR3 ரேம் வசதியும் உள்ளது. சேமிப்புதிறனை பொறுத்தவரை 32GB உள்ளார்ந்த சேமிப்பும், 128GB வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்.டி கார்டும் உள்ளது.

Best Mobiles in India

English summary
iBall CompBook Merit G9 With Windows 10, 2GB RAM Launched at Rs. 13,999 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X