ரூ.14,299/-க்கு 14இன்ச், 3ஜிபி ரேம் கொண்ட மார்வெல் 6 லேப்டாப் இந்தியாவில்.!

By Prakash
|

ஐபால் நிறுவனம் இந்தியாவின் எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதில் முன்னனி நிறுவனமாகும். கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன், டேட்டா கார்டு, டேப்லட் என பல பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

தற்போது இந்நிறுவனம் ஐபால் கம்ப்புக் மார்வெல் 6 லேப்டாப் என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் கணினி சந்தையில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த புது ஐபால் மாடல்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

14- இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளேவுடன் ஐபால் கம்ப்புக் மார்வெல் 6 லேப்டாப் வெளிவந்துள்ளது, மேலும் இதன் வடிவமைப்புக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

3ஜிபி ரேம்:

3ஜிபி ரேம்:

இந்த ஐபால் கம்ப்புக் பொறுத்தமட்டில் 3ஜிபி ரேம் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இவை இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

செயலி:

செயலி:

இந்தக் கணினி 2.4 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் இன்டல் செலரான் என்3350 செயலி கொண்டுள்ளது. இது விண்டோஸ் 10 ப்ரோவுடன் தற்போது கிடைக்கிறது.

ஹார்ட் டிஸ்க்:

ஹார்ட் டிஸ்க்:

இந்த மடிக்கணினி உள்ளே 2.5 அங்குல ஹார்ட் டிஸ்க் டிரைவ் / எஸ்எஸ்டி ஆகியவற்றை இணைப்பதற்கு 1டிபி வரை சேமிப்பு,மேலும் விரிவாக்கப்படலாம்.

இணைப்பு சாதனங்கள்:

இணைப்பு சாதனங்கள்:

இதில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு சாதனங்கள் வைஃபை, ப்ளூடூத், மினி எச்டிஎம்ஐ வேர், யுஎஸ்பி 3.0 போன்றவற்றை இவை ஆதரிக்கிறது. மேலும் இன்டர்நெட் பயன்பாடு போன்ற சிறப்பு அம்சங்களுக்கு இவை அருமையாக பயன்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

38வாட் லி-பாலிமர் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது, புதிய அங்கீகார தொழில்நுட்பத்துடன் மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது. இதன் விலை பொறுத்தமட்டில் ரூபாய்.14,299ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
iBall CompBook Marvel 6 laptop with 14inch screen 3GB RAM launched in India for Rs 14299: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X