ரூ.16,999/- விலையில் ஐபால் நிறுவனத்தின் புதிய மாடல் லேப்டாப்.!

|

ஐபால் நிறுவனம் தற்போது புதிய வகை லேப்டாப் ஒன்றை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஐபால் காம்புக் எம்500 என்ற மாடலை கொண்ட இந்த லேப்டாப் இரண்டு வகைகளில் வெளியாகியுள்ளது. ஒன்று விண்டோஸ் 10 ஓஎஸ்-இல் இயங்கும். இதன் விலை ரூ.16,999. இன்னொன்று விண்டோஸ் 10 புரோ ஓஎஸ்-இல் இயங்கும். இதன் விலை ரூ.18,999. இந்த இரண்டு வகை லேப்டாப்புகளும் தொழில் செய்பவர்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள முன்னணி ரீடெயில் கடைகளில் இந்த இரண்டுவித புதிய மாடல் லேப்டாப்புகள் கிடைக்கும்.

ரூ.16,999/- விலையில் ஐபால் நிறுவனத்தின் புதிய மாடல் லேப்டாப்.!


இந்த மாடல் லேப்டாப்பின் சிறப்பம்சங்கள்
ஐபால் காம்புக் எம்500 என்ற மாடல் லேப்டாப், 14 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டது. டூயல் கோர் இண்டெல் செல்ரான் பிராஸசர் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் 2.4GHz தன்னையுடன் 4 ஜிபி ரேம் கொண்டது. மேலும் இந்த ஐபால் காம்புக் எம்500 என்ற மாடல் லேப்டாப் மிக விரைவில் பூட் ஆகும் வகையில் உள்ளது. மேலும் இந்த லேப்டாப்பில் 32ஜிபி அளவுக்கு ஸ்டோரேஜ் கொண்டது. மேலும் கூடுதல் ஸ்டோரேஜ் வேண்டுமென்றால் 1டிபி வரையிலான எஸ்.எஸ்டி அல்லது ஹார்ட் டிஸ்க் பயன்படுத்தி கொள்ளலாம்.


இந்த ஐபால் காம்புக் எம்500 என்ற மாடல் லேப்டாப்பில் இரண்டு யூஎஸ்பி போர்ட்டுக்கள் உள்ளன. மற்றும் ஒரு மினி எச்.டி.எம்.ஐ 1.4ஏ போர்ட், டூயல் ஸ்பீக்கரகள் மற்றும் 38W பேட்டரியும் இதில் அடங்கும். இந்த பேட்டரி மூலம் 5,50 மணி நேரம் லேப்டாப்பை இயக்கலாம். மேலும் இதில் தொடர்ச்சியாக 23 மணி நேரம் ஆடியோவும் கேட்கலாம்

ரூ.16,999/- விலையில் ஐபால் நிறுவனத்தின் புதிய மாடல் லேப்டாப்.!

ஓஎஸ் குறித்த தகவல்
இந்த ஐபால் காம்புக் எம்500 என்ற மாடல் லேப்டாப்பில் விண்டோஸ் 10 வெர்ஷன் ஓஎஸ் உடன் ஆண்ட்டி வைரஸ் கண்டுபிடிக்கும் தன்மையும் உண்டு. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டிஜிட்டல் அசிஸ்டெண்ட் கோர்ட்டானா வசதியும் இதில் உண்டு.


இந்த லேப்டாப்பை அறிமுகம் செய்தபோது ஐபால் நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் இயக்குனர் சந்தீப் பரசரம்புரியா அவர்கள் கூறியபோது, 'ஐபால் சாதனங்கள் அனைத்துமே தரமான பொருளாக உருவாக்குவதற்கு முயற்சித்து, அதில் வெற்றி பெற்று வருகிறது, அந்த வகையில் இந்த லேப்டாப் உறுதியானது, எங்கள் மொத்த வாடிக்கையாளர் தளத்திற்கு இசைவான டிஜிட்டல் வாழ்க்கையுடன் உதவுகிறது. ஐபால் காம்பேக் எம் 500 உடன், நாங்கள் தொழில்முறை வேலைகளை சரியாக செய்திருக்கின்றோம். மேலும் வாடிக்கையாளர்கள் இந்த விலைக்கு இவ்வளவு அரிய அம்சங்களுடன் கூடிய லேப்டாப்பை இதற்கு முன்னால் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்

ரூ.16,999/- விலையில் ஐபால் நிறுவனத்தின் புதிய மாடல் லேப்டாப்.!


ஐபால் காம்புக் மெரிட் ஜி9
ஐபால் காம்பேக் எம் 500 மாடல் லேப்டாப்புடன், காம்பேக் மெரிட் ஜி9 என்ற மாடலும் கடந்த மே மாதம் வெளியானது. இந்த லேப்டாப்பின் விலை ரூ.13,999 ஆகும். இதிலும் இண்டெல் செலிரான் என்3350 பிராஸசர் உள்ளது. மேலும் இந்த மாடல் லேப்டாஅப்பும் விண்டோஸ் 10 ஓஎஸ் மற்றும் கோர்ட்டானா வசதியுடன் உள்ளது. இதேபோன்று இன்னொரு லேப்டாப் பட்ஜெட் விலையில் வெளிவரவுள்ளது.


என்னதான் பட்ஜெட் விலையில் இந்த லேப்டாப்புகள் கிடைத்தாலும் இதன் தரம், உழைப்பு ஆகியவற்றை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
iBall CompBook M500 laptop launched starting Rs. 16,999 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X