ரூ.29,999-விலையில் கிடைக்கும் ஐபால் காம்ப்புக் ஏர் 3 லேப்டாப்.!
ஐபால் காம்ப்புக் ஏர் 3 லேப்டாப் பொறுத்தவரை 13.3-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் டச்ஸ்கீரின் தொழில்நுட்பம் இவற்றில் இடம்பெற்றுள்ளது.
ஐபால் நிறுவனம் தற்சமயம் 360 டிகிரி ரோட்டேட் டிஸ்ப்ளே கொண்ட காம்ப்புக் ஏர் 3 என்ற லேப்டாப் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது, இந்த லேப்டாப் விலைப் பொறுத்தவரை ரூ.29,999ஆக உள்ளது. மேலும் பல அதிநவீன தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபால் நிறுவனம் பொறுத்தவரை இந்தியாவில் சிறந்த தரம் கொண்ட பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்துவருகிறது, மேலும் தற்போது விற்பனைக்கு வரும் ஐபால் காம்ப்புக் ஏர் 3 லேப்டாப் பொறுத்தவரை சிறந்த செயல்திறன் மற்றும் அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பம் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

டிஸ்பிளே:
ஐபால் காம்ப்புக் ஏர் 3 லேப்டாப் பொறுத்தவரை 13.3-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் டச்ஸ்கீரின் தொழில்நுட்பம் இவற்றில் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு (1080-1920)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த காம்ப்புக் ஏர் 3 லேப்டாப்.

நினைவகம்:
இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது, மேலும் 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளதுகாம்ப்புக் ஏர் 3 லேப்டாப். மேலும் காம்ப்புக் ஏர் 3 இணையம் மற்றும் விளையாட்டு போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

இன்டெல் பென்டியம்:
ஐபால் காம்ப்புக் ஏர் 3 லேப்டாப் பொதுவாக குவாட்-கோர் இன்டெல் பென்டியம் என்4200 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2.5ஜிகாஹெர்ட்ஸ் வேகத்துடன் செயல்படுகிறது இந்த லேப்டாப்.

ஆடியோ:
ஐபால் காம்ப்புக் ஏர் 3 லேப்டாப் ஆடியோ துறை பொறுத்தவரை மிக அருமையாக இருக்கிறது, குவாட்-ஸ்பீக்கர் இவற்றுள்பொறுத்தப்பட்டுள்ளது சிறந்த ஒலி அமைப்பை கொடுக்கும் இந்த லேப்டாப்.

இணைப்பு ஆதரவு:
யுஎஸ்பி டைப்-சி போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், மைக்ரோ எச்டிஎம்ஐ போர்ட், இன்டெல் இரட்டை பேண்ட் வயர்லெஸ்-ஏசி 3165,ப்ளூடூத் வி4.0, வெப்கேம் போன்ற பல இணைப்பு ஆதரவுகளுடன் வருகிறது இந்த ஐபால் காம்ப்புக் ஏர் 3 லேப்டாப்.

விலை:
ஐபால் காம்ப்புக் ஏர் 3 லேப்டாப் 1.48கிலோ எடை கொண்டுள்ளது, அதன்பின்பு இவற்றின் விலைப் பொறுத்தவரைரூ.29,999ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications