Home
Computer

டேப்லெட் துறையில் கால் பதிக்கும் ஹூண்டாய்!

By Karthikeyan
டேப்லெட் துறையில் கால் பதிக்கும் ஹூண்டாய்!

கார் தயாரிப்பில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வரும் தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் தற்போது டேப்லட் தயாரிப்பில் களம் இறங்க இருக்கிறது. அதுவும் தனது டேப்லெட்டை ரஷ்யாவில் இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய இருக்கிறது.

குறிப்பாக இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே ரஷ்ய சந்தையில் தங்கள் புதிய டேப்லெட்டை களமிறக்கப் போவதாக ஹூண்டாயின் அதிகாரப்பூர்வமான ஆன்லைன் செய்தித் தாள் கூறுகிறது.

ஹூண்டாயின் புதிய டேப்லெட் இரண்டு மாடல்களில் வரவிருக்கின்றன. ஒன்றில் 9.7 இன்ச் திரையும் மற்றொன்றில் 10.1 இன்ச் திரையும் இருக்கும். அதோடு இந்த இரண்டு மாடல் டேப்லெட்டுகளுமே ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் மொபைல் இயங்கு தளத்தில் இயங்கும்.

மேலும் இந்த இரண்டு டேப்லெட்டுகளுமே 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி ஆகியவற்றுடன் வருகின்றன. அதோடு வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற இணைப்பு வசதிகளையும் இந்த டேப்லெட்டுகள் வழங்கும்.

முதலில் தனது டேப்லெட்டுகளை வரும் அக்டோபரில் சீனாவிலும் அதனைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் களமிறக்க ஹூண்டாய் திட்டமிட்டிருக்கிறது. ஒருவேளை இந்த ஆண்டுக்குள் 2,00,000 டேப்லெட்டுகளை ஹூண்டாய் விற்றுத் தீர்த்தால் ரஷ்யாவில் ஒரு நிலையான சந்தையை ஹூண்டாய் எட்டிவிடும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் போட்டிகள் நிறைந்த சந்தையில் ஹூண்டாய்க்கு சற்று கடினமாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். பொருத்திருந்து பார்க்கலாம்.

இந்த டேப்லெட்கள் ரஷ்ய மதிப்பில் 7000 ரூபிள்கள் (213 அமெரிக்கா டாலர்கள்) மற்றும் 12,000 ரூபிள்கள் (365 அமெரிக்க டாலர்கள்) ஆகிய விலைக்கு விற்கப்பட இருக்கின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X