Home
Computer

ஹைபர்எக்ஸ் அறிமுகம் செய்யும் நவீன கேம்மிங் ஹெட்செட்.!

இந்த ஹைபர்எக்ஸ் கிளவ்டு ஸ்டிஞ்சர் கோர் ஹெட்செட்டில், ஒரு மாற்றி அமைக்கக் கூடிய ஸ்டீல் ஸ்லைடர் மற்றும் ஒரு சுழலும் மைக் உடன் கூடிய இதமளிக்கும் மிருதுவான தன்மை கொண்ட காது குஷன்கள் உள்ளன.

By Jijo Gilbert

கேம்மிங் ஆர்வலர்களுக்கான மற்றொரு உயர்தர ஹெட்செட்டை, ஹைபர்எக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. கிங்ஸ்டன் டெக்னாலஜி நிறுவனத்தின் ஹைபர்எக்ஸ் என்ற கேம்மிங் பிரிவு, ஹைபர்எக்ஸ் கிளவ்டு ஸ்டிஞ்சர் கோர் கேம்மிங் ஹெட்செட்டை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தாங்கள் அளிக்கும் பணத்திற்கு ஏற்ற மதிப்புள்ளதாக, சிறப்பாக இயங்க விரும்பும் கன்சோல் கேம்மர்களுக்கான வடிவமைக்கப்பட்ட இது, ஒரு விலைக் குறைந்த ஹெட்செட் ஆகும்.

ஹைபர்எக்ஸ் அறிமுகம் செய்யும் நவீன கேம்மிங் ஹெட்செட்.!


இந்த ஹைபர்எக்ஸ் கிளவ்டு ஸ்டிஞ்சர் கோர் ஹெட்செட்டில், ஒரு மாற்றி அமைக்கக் கூடிய ஸ்டீல் ஸ்லைடர் மற்றும் ஒரு சுழலும் மைக் உடன் கூடிய இதமளிக்கும் மிருதுவான தன்மை கொண்ட காது குஷன்கள் உள்ளன. மேலும் ஒரு கவர்ச்சிகரமான இன்-கேம் ஆடியோ அனுபவத்தை அளிக்கக்கூடிய திசைமாற்றி 40மிமீ டிரைவர்கள் மட்டுமின்றி, 2 ஆண்டுகள் உத்தரவாதம் மற்றும் இலவச தொழில்நுட்ப ஆதரவு அளிக்கப்படுகிறது. தற்போது இந்தியாவில், சில்லறை மற்றும் இணையதள விற்பனையகங்களில் ரூ.4,200 என்ற விலை நிர்ணயத்தில் கிடைக்கிறது.

ஹைபர்எக்ஸ் கிளவ்டு ஸ்டிஞ்சர் கோர் ஹெட்செட் 215 கிராம் எடைக் கொண்டுள்ளதோடு, பன்முக பணியகத்திற்கு இணக்கமாகவும் கேபிள் இணைப்பு மூலம் வசதியான ஆடியோ கட்டுபாடுகளை நேரடியாகவும் அளிக்கிறது. இந்த எடைக் குறைந்த ஹெட்செட்டில், ஒரு கவர்ச்சிகரமான இன்-கேம் ஆடியோ அனுபவத்தை அளிக்கக்கூடிய திசைமாற்றி 40மிமீ டிரைவர்கள் இருப்பதோடு, இது மூடிய கோப்பையைப் போன்ற வடிவம் கொண்டிருப்பதால், தொந்தரவுகளைத் தடுக்கவும் இன்-கேம் ஒலியை மிக கச்சிதமாக அளிக்கவும் முடிகிறது.

இது குறித்து ஹைபர்எக்ஸ் இந்தியா கூறுகையில், "தேவையை அறிந்து அதற்கு ஏற்ப கட்டமைக்கப்பட்டுள்ள ஹைபர்எக்ஸ் கிளவ்டு ஸ்டிஞ்சர் ஹெட்செட், குறைந்த விலையை எதிர்நோக்கி உள்ள கன்சோல் கேம்மர்களுக்காக ஒரு புதிய உயர் தரத்துடன் நாங்கள் வடிவமைத்துள்ளோம். இந்த ஹெட்செட் வலிமையான மற்றும் நீடித்து உழைக்கக் கூடிய வகையில் ஸ்டீல் ஸ்லைடர்களைக் கொண்டுள்ளது. எனவே எந்த தங்குதடையும் இல்லாமல் பயனர்கள் பல மணிநேரங்களுக்கு விளையாடுவதற்கு ஏதுவாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹைபர்எக்ஸ் கிளவ்டு ஸ்டிஞ்சர் கோர் ஹெட்செட்டில் விளையாடும் போது, தெளிவான மற்றும் கச்சிதமான ஆடியோ அளிக்கப்படுவதால், தளங்கள் முழுவதும் கேம்மர்களுக்கு விரைவாக செயல்பட முடிகிறது. பிஎஸ்4-க்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஹைபர்எக்ஸ் கிளவ்டு ஸ்டிஞ்சர் கோர், எக்ஸ்பாக்ஸ் ஒன் 1 மற்றும் நின்டின்டோ ஸ்விட்ச் ஆகியவை உடனும் கச்சிதமாகச் செயல்படுகிறது.

ஹைபர்எக்ஸ் கிளவ்டு ஸ்டிஞ்சர் முக்கிய அம்சங்கள்:

கன்சோல் கேம்மிங்-க்காக வடிவமைக்கப்பட்டது

கச்சிதமான மற்றும் சுமூகமாக முறையில் மேம்படுத்தப்பட்டது

கவர்ச்சிகரமான இன்-கேம் ஆடியோ

இரண்டு வருட உத்தரவாதம் மற்றும் இலவச தொழில்நுட்ப ஆதரவு

ஹைபர்எக்ஸ் கிளவ்டு ஸ்டிஞ்சர் கூடுதல் சிறப்பம்சங்கள்:

ஹைபர்எக்ஸ் அறிமுகம் செய்யும் நவீன கேம்மிங் ஹெட்செட்.!


ஹெட்போன்

- டிரைவர்: டைனாமிக், நியோடைமியம் காந்தங்கள் கொண்ட 40மிமீ

- வகை: காது வெளிப்புறமாக மூடிய நிலையில் காணப்படுகிறது

- அலைவரிசை மறுமொழி: 20ஹெச்இசட் - 20,000ஹெச்இசட்

- மின்தடுப்பு: 16 Ω

- ஒலி அழுத்த நிலை: 1கேஹெச்இசட் இல் 99டிபிஎஸ்பிஎல்/எம்டபிள்யூ

- டி.ஹெச்.டி.:

- எடை: 215 கிராம்

- கேபிள் நீளம் மற்றும் வகை: ஹெட்செட் (1.3மீ)

- இணைப்பு: ஹெட்செட் - 3.5மிமீ பிளக் (4 போல்)

மைக்ரோபோன்
- உறுப்பு: மின்தேக்கி கன்டென்ஸர் மைக்ரோபோன்

- போலர் முறை: சத்தம்-நீக்குவது

- அலைவரிசை : 50ஹெச்இசட் - 18,000 ஹெச்இசட்

- உணர்திறன்: -41.5டிபிவி (0டிபி=1வி/பிஏ,1கேஹெச்இசட்)

முன்னதாக, இந்திய கேம்மர்கள் மற்றும் ப்ரோ அணியினருக்காக, தனது அடுத்த தலைமுறையைச் சேர்ந்த கேமிங் ஹெட்செட் ஆன ஹைபர்எக்ஸ் கிளவ்டு ஆல்ஃபா-வை, இந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. 50மிமீ டிரைவர்களுடன் கூடிய இரட்டை உள்ளறை வடிவமைப்பில் அமைந்த ஹைபர்எக்ஸ், இடைப்பட்ட மற்றும் உயர்ந்த பாஸ் அலைவரிசைகளுக்கு இடையே பிரித்து காட்டி, கேம்மிங், இசை மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றில் ஒரு சக்தி வாய்ந்த ஒலியை உருவாக்கி, அதிக யதார்த்தம் மற்றும் கவர்ச்சியை அளித்தது. இந்த ஹைபர்எக்ஸ் கிளவ்டு ஆல்ஃபா ஹெட்செட் இந்த ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி முதல் ரூ.10,499 விலை நிர்ணயத்தில், எல்லா முன்னணி ஆன்லைன் மற்றும் சில்லறை கடைகளிலும் கிடைக்கப் பெறுகின்றன.

Best Mobiles in India

English summary
HyperX launches Cloud Stinger Core gaming headset in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X