Home
Computer

ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்வீஜ் ஓஎஸ்க்கு மாறும் மீடியாபேட்!

By Karthikeyan
ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்வீஜ் ஓஎஸ்க்கு மாறும் மீடியாபேட்!

கெட்ஜெட் உலகின் முக்கிய செய்தியே இப்போது பெரும்பாலான சாதனங்கள் படிப்படியாக ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்திற்கு மாறிக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் ஹுவெய் நிறுவனமும் தனது 7 இன்ச் மீடியாபேட் டேப்லெட்டை ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்வீஜ் இயங்கு தளத்தால் அப்டேட் செய்ய இருக்கிறது. தற்போது இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு ஹனிகோம்ப் இயங்கு தளத்தில் இயங்கி வருகிறது.

ஹூவெய் மீடியாபேட் டேப்லெட் ஜூன் 2011ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் டூவல் கோர் 1.2 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் உண்டு. இதன் ஹார்ட்வேர் பக்காவாக உள்ளது. இதன் டிஸ்ப்ளே 7 இன்ச் அளவில் க்ளேர் ஐபிஎஸ் எல்சிடி வசதி கொண்டு வருகிறது.

இந்த டிஸ்ப்ளேயின் பிக்சல் ரிசலூசன் 1280 x 800 ஆகும். அதே போல் இந்த பிக்சலின் அடர்த்தி ஒரு இன்ச்சுக்கு 217 பிக்சல்கள் ஆகும். உயர்ந்த ரிசலூசன் கொண்ட திரையுடன் வந்த டேப்லெட்டுகளின் இந்த மீடியாபேட் டேப்லெட்டும் அடக்கம். மேலும் இதன் திரை மிக பக்காவாகத் தெளிவாக இருக்கிறது.

இதன் முக்கிய கேமரா இதன் பின்புறம் உள்ளது. இந்த கேமரா 5 மெகா பிக்சல்களும் அதே நேரத்தில் ஆட்டோ ஃபோகசும் கொண்டு வருகிறது. இந்த கேமரா 720 பிக்சல்கள் அடங்கிய வீடியோக்களை மிக எளிதாக ரிக்கார்ட் செய்யும் சக்தி கொண்டது. இதன் முகப்பு கேமரா 1.3 மெகா பிக்சல்களைக் கொண்டு வீடியோ ரிக்கார்டிங் செய்யும் வசதியையும் கொண்டிருக்கிறது.

இந்த டேப்லெட் வைபை மற்றும் ப்ளூடூத் இணைப்பையும் தன்னிலே கொண்டுள்ளது. மேலும் இது எச்எஸ்டிபிஎ நெட்வொர்க்கிற்கு சப்போர்ட் செய்வதால் இதன் பதிவிறக்கம் செய்யும் வேகம் 14.4 எம்பிபிஎஸ் ஆகும். இந்த டேப்லெட் ஏற்கனவே சந்தையைக் கலக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் இதற்கு ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளம் அப்டேட் செய்யப்பட்டால் இதன் ஆட்டத்தை நிறுத்த முடியாது என்று சொல்லும் அளவிற்கு விற்பனையில் சாதனை புரியும் என்று நம்பலாம்.

இந்தியாவில் இந்த ஹூவாய் மீடியாபேட் டேப்லெட்டின் விலை ரூ.29,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X