ஹூவேய் வழங்கும் புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்

ஹூவேய் நிறுவனம் ஒரு தொடக்க நிலை ஆன்ட்ராய்டு டேப்லெட்டை இந்தியாவில் களமிறக்க இருக்கிறது. மீடியாபேட் 7 என்று அழைக்கப்படும் இந்த டேப்லெட்டை நவம்பர் முதல் வாரத்தில் ஹூவேய் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மீடியாபேட் 7 டேப்லெட் ரூ.14,000க்கு விற்கப்படும் என்று ஹூவேயின் இந்திய தலைவர் விக்டர் ஷான் தெரிவித்திருக்கிறார். மேலும் வருகின்ற காலங்களில் ஹூவேய் ரூ.10,000க்குள் ஒய் வரிசையில் வரும் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த மீடியாபேட் 7 டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 இயங்கு தளத்தில் வருகிறது. மேலும் இதில் 7 இன்ச் அளவில் மல்டி டச் வசதி கொண்ட டிஸ்ப்ளே உள்ளது. அதோடு இந்த டேப்லெட்டில் 1.2 ஜிஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் எ8 ப்ராசஸர், 3.2எம்பி பின்பக்க கேமரா, 0.3எம்பி முகப்புக் கேமரா போன்றவையும் உள்ளன.
இந்த டேப்லெட்டில் 1ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி மெமரியும் உள்ளன. இந்த மெமரியை 32ஜிபி அளவிற்கு மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் விரிவு செய்ய முடியும். இணைப்பு வசதிகளுக்கா இந்த டேப்லெட்டில் 3ஜி, வைபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் வசதிகளும் உள்ளன.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications