மீடியாபேட்7 லைட் டேப்லெட்டை இந்தியாவில் களமிறக்கி இருக்கும் ஹூவேய்

By Karthikeyan
|
மீடியாபேட்7 லைட் டேப்லெட்டை இந்தியாவில் களமிறக்கி இருக்கும் ஹூவேய்

கடந்த ஆகஸ்ட் மாதம் ஹூவேய் நிறுவனம் தனது புதிய டேப்லெட்டான மீடியா பேட் 7 லைட்டை அறிமுகம் செய்து வைத்தது. தற்போது இந்த போனை ஹூவேய் இந்தியாவில் விற்பனைக்கு வைத்திருக்கிறது. சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் பிலிப்கார்ட் ஆன்லைன் மூலம் இந்த டேப்லெட்டை ரூ.13,700க்கு வாங்கலாம்.

இந்த மீடியாபேட் டேப்லெட் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதன் 7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே மல்டி டச் வசதியைக் கொண்டிருக்கிறது. இந்த போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வருவதால் கண்டிப்பாக நுகர்வோரைச் சுண்டி இழுக்கும் என்று நம்பலாம்.

மேலும் இந்த போன் 1.2 ஜிஹெர்ட் கோர்ட்டெக்ஸ் எ8 ப்ராசஸரில் வருவதால் இதன் மிக வேகமாக இயங்கும் என்று உறுதியாகக் கூறலாம். அதோடு இந்த போன் 3ஜி சப்போர், வாய்ஸ் காலிங், எஸ்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ் போன்ற வசதிகளையும் கொண்டிருக்கிறது.

கேமராவைப் பொருத்தமட்டில் இந்த டேப்லெட்டில் 3.2எம்பி பின்பக்கக் கேமராவும் மற்றும் 0.3எம்பி முகப்புக் கேமராவும் உள்ளது. இந்த கேமரா மூலம் வீடியோ உரையாடலை மிக சூப்பராக நடத்த முடியும். மேலும் இந்த டேப்லெட்டில் 1080பி வீடியோ ப்ளேபேக் வசதியும் உண்டு.

இந்த டேப்லெட்டில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி உள்ளது. இந்த மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட் 3ஜி, வைபை, டிஎல்என்எ, ப்ளூடூத், எஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி ஒடிஜி சப்போர்ட் போன்ற வசதிகளையும் கொண்டிருக்கிறது.

இந்த டேப்லெட்டை வாங்க பிலிப்கார்ட் ஆன்லைனில் விண்ணப்பித்தால் 8 நாள்களுக்குள் கைகளுக்கு கிடைத்துவிடும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X