Home
Computer

சிறந்த தொழில் நுட்பங்களை வழங்க வரும் ஹுவெய் டேப்லட்!

By Super

சிறந்த தொழில் நுட்பங்களை வழங்க வரும் ஹுவெய் டேப்லட்!
மீடியாபேட்-7 லைட் என்ற புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்கிறது ஹுவெய் நிறுவனம். புதிதாக அறிமுகமான இந்த டேப்லட்டிற்கு ப்ரீ-ஆர்டர் வசதிகளும் ஆரம்பமாகி உள்ளது. இந்த புதிய டேப்லட்டின் தொழில் நுட்ப வசதிகளை இங்கே பார்க்கலாம்.

7 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த டேப்லட்டில் கிடைக்கும் துல்லியம் சிறப்பானது என்று கூறலாம். இதில் 1024 X 600 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த டேப்லட்டில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸரினையும்

பெறலாம்.

குறைந்த விலை கொண்ட இந்த டேப்லட் 3ஜி தொழில் நுட்பத்தினை வழங்கும். 4 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதி, 32 ஜிபி வரை மைக்ரோஎஸ்டி கார்டு ஆகிய வசதிகளை இதில் சிறப்பாக பெற முடியும். இன்னும் இந்த டேப்லட் பற்றி கூற வேண்டிய விஷயம் என்னவென்றால் இதில் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்கிரேடு

வசதியினையும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் இருக்கும் 3ஜி போன்ற சிறந்த தொழில் நுட்ப வசிதகளை பயன்படுத்த இதன் சிறப்பாக 4,100 எம்ஏஎச் பேட்டரியினை பயன்படுத்தலாம். இதன் மூலம நீடித்து உழைக்கும் ஆற்றலையும் பெற முடியும். இந்த டேப்லட்டினை ரூ. 13,700 விலையில் பெறலாம். இந்த டேப்லட்டினை ஃப்லிப்கார்ட் வலைத்தளத்தில் எளிதாக பெற முடியும். இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X