8வது ஜென் இன்டெல் கோர் செயலிகளுடன் ஹூவாய் மேட்புக் டி (2018) அறிமுகம்.!
இக்கருவி 15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் (1920 x 1080) பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இதன் திரை சற்று வித்தியாசமாக உள்ளது.
சமீபத்திய சிறந்த செயலிகள் மற்றும் ஜி.பீ.யூக்கள் கொண்டு ஹூவாய் மேட் புக் டி (2018) என்ற லேப்டாப் மாடலை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது ஹூவாய் நிறுவனம். மேலும் இந்த லேப்டாப் மாடலில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
ஹூவாய் மேட்புக் டி (2018) லேப்டாப் மாடல் பொறுத்தவரை மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது. மேலும் இதன் வடிவமைப்பு மிக அருமையாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கணினி சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஹூவாய் சாதனம்.

டிஸ்பிளே:
இக்கருவி 15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் (1920 x 1080) பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இதன் திரை சற்று வித்தியாசமாக உள்ளது.

இன்டெல் கோர்:
ஹூவாய் மேட்புக் டி (2018) லேப்டாப் சாதனம் இன்டெல் கோர் ஐ5, இன்டெல் கோர் ஐ7 மற்றும் சமீபத்திய 8 வது தலைமுறை ஜென் இன்டெல் கோர் செயலிகளுடன் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு சேமிப்பு திறமைகளுடன் இந்த லேப்டாப் மாடல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராபிக்ஸ் கார்டு:
ஹூவாய் மேட்புக் டி (2018) லேப்டாப் சமீபத்திய என்விடியா எம்எக்ஸ்150 கிராபிக்ஸ் கார்டு மூலம் இயக்கப்படுகிறது, அதன்பின்பு அதிக நேரம்
தாங்கும் பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10:
இந்த ஹூவாய் மேட்புக் டி (2018) லேப்டாப் சாதனம் பொதுவாக விண்டோஸ் 10 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு அம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
இரட்டை-ஆண்டெனா வடிவமைப்பு கொண்ட வைஃபை, யுஎஸ்பி 3.0 போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், மேவும் பல இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

விலை:
இந்த ஹூவாய் சாதனத்தின் விலை மதிப்பு ரூ.50,761-முதல் துவங்குகிறது, மேலும் ஹூவாய் மேட்புக் டி (2018) லேப்டாப் மாடலின் பல
தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications