Home
Computer

ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஹூவாய் மேட்புக் 13 மாடல் லேப்டாப்.!

ஹூவாய் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஹூவாய் மேட்புக் 13 என்ற சாதனத்தை அறிமுகம் செய்தது

இந்த ஆண்டு லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற சி.இ.எஸ் நிகழ்ச்சிய்ல் ஹூவாய் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஹூவாய் மேட்புக் 13 என்ற சாதனத்தை அறிமுகம் செய்தது. இந்த ஹூவாய் மேட்புக் 13, ஆப்பிள் மேக்புக் 2018 மாடலை போலவே ஸ்லிம் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஹூவாய் மேட்புக் 13 மாடல் லேப்டாப்.!

ஹூவாய் மேட்புக் 13 விலை மற்றும் விபரங்கள்

ஹூவாய் மேட்புக் 13 சாதனத்தின் அடிப்படை விலை $1000 என்றும் நிவ்டியா எம்.கெஸ் 150 மாடல் $1300 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹூவாய் மேட்புக் 13 மாடல் 13 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் 2160x1440 என்ற ரெசலூசனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்க்ரீன் காண்ட்ராஸ்ட் 1000:1 என்றா வகையிலும், 178 டிகிரி வைட் ஆங்கிள் வகையிலும் ஆஸ்பெக்ட் 3:2 என்ற விகிதத்திலும் உள்ளது. இந்த ஹூவாய் மேட்புக் 13 லேப்டாப் இந்நிறுவனத்தின் மிகவும் மெலிதான அதே நேரத்தில் 1.28 கிலோ கிராம் எடை கொண்டது. இந்த மாடல் 14.9 மிமீ அளவே உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வைரத்தை அறுக்கும் டெக்னாலஜியின் இந்த பாகங்கள் அனைத்தும் செய்யப்பட்டவை. அதுமட்டுமின்றி மென்மையாகவும் அகலம் குறைவாகவும் இருப்பதற்காக நவீன டெக்னாலஜியும் இதில் புகுத்தப்பட்டுள்ளது.

இந்த ஹூவாய் மேட்புக் 13 மாடல் லேப்டாப் 8வது தலைமுறைக்கான இண்டல்கோர் ஐ7 8568U சிபியூ வகையை கொண்டது. 2ஜிபி GDDR5 ஜிபியூ மற்றும் 16 ஜிபி ரேம் கொண்டது. மேலும் இதில் உள்ள ஃபேன், சாதனத்தை குளிர்ந்த நிலையில் வைக்க உதவுகிறது. மேலும் இந்த லேப்டாப்பில் 41.838Whr (3670mAh/11.4V) பேட்டரி தன்மை இருப்பதால் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 100 மணி நேரம் இதில் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. பத்தே நிமிடம் மட்டும் சார்ஜ் செய்தால் அதன்பின் சுமார் இரண்டரை மணி நேரம் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த 4ஹூவாய் மேட்புக் 13 மாடல் லேப்டாப்பில் டூயல் யூஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளது. வலது புறம் உள்ள போர்ட் டேட்டாவை டிரான்ஸ்பர் செய்யவும், டிஸ்ப்ளே அவுட்புட் செய்யவும் உதவுகிறது. அதேபோல் இடதுபுறம் உள்ள போர்ட் டேட்டா டிரான்ஸ்பர் செய்யவும், சார்ஜ் செய்யவும் உதவுகிறது. மேலும் இதனுடன் ஒரு 3.5மிமீ கொண்ட ஹெட்போன் ஜேக் உள்ளடஹு. மேலும் பிங்கர் பிரிண்ட் வசதியால் மட்டுமே பவர் பட்டனை வேலை செய்ய முடியும் என்பதால் பாதுகாப்புக்கு உகந்தது. மேலும் இந்த லேப்டாப்பில் டூயல் பேண்ட் 802.11ஏசி வைபை, புளூடூத் 5.0, 1 எம்பி வெப் கேமிரா, டூயல் மைக்ரோ போன் மற்றும் டால்பி அட்மாஸ் சவுண்ட் சிஸ்டமும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei MateBook 13 officially unveiled with Nvidia MX 150 GPU Price starts at Rs 70000 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X