ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு!

Posted By: Karthikeyan
 ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு!

கணினி உதிரி பாகங்களை தயாரிப்பதில் முன்னனியில் இருக்கும் ஹுவெய் நிறுவனம் ஒரு புதிய வைபை டேட்டா கார்டைக் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய டேட்டா கார்டுக்கு இ355 வைபை மோடம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது மோடமாகவும், அதேநேரத்தில் வைஃபை சாதனமாகவும் செயல்படும்.

அதே நேரத்தில் இது ஒரு வைஃபை சாதனமாகவும் செயல்படும். அதாவது இந்த சாதனத்தின் மூலம் ஒரே நேரத்தில் 5 வைபை சதானங்களை இணைக்க முடியும். இந்திய சந்தையில் இந்த சாதனம் ரூ.5,499க்கு விற்கப்பட இருக்கிறது. அதனால் இதை இந்திய வாடிக்கையாளர்கள் மிக எளிதாக வாங்க முடியும்.

அதோடு இந்த சாதனத்தில் யுஎஸ்பி இன்டர்பேஸ் உள்ளதால் கணினி மூலம் இந்த சாதனத்தை சார்ஜ் செய்யலாம். அதோடு இந்த சாதனம் மிக வேகமாக இயங்கும் சக்தியைக் கொண்டிருக்கிறது. எனவே இதை அலுவலகம் மற்றும் வீடுகளில் பயன்படுத்த முடியும்.

மேலும் இந்த சாதனம் எச்எஸ்பிஎ+21 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தையும் மற்றும் 5.76 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும் சப்போர்ட் செய்யும். அதற்காக இந்த சாதனம் 3ஐ தொழில் நுட்பத்துடன் வருகிறது. அதனால் இந்த கார்டு மூலம் இணைய தளத்தை மிக விரைவாக ப்ராவுஸ் செய்ய முடியும்.

இந்த டேட்டா கார்டை டேப்லெட், விளையாட்டு சாதனங்கள், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன்கள்மற்றும் இசைப் பேழைகள் போன்றவற்றில் மிக எளிதாக இணத்துக் கொள்ளலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot