Home
Computer

குறைந்த விலை டேப்லெட்டில் இவ்வளவு வசதிகளா?

By Super

குறைந்த விலை டேப்லெட்டில் இவ்வளவு வசதிகளா?
குறைந்த விலையில் நிறைந்த வசதிகள் கொண்ட டேப்லெட்டை வாங்க வேண்டும் என்றால் அது ஹூவெய் ஐடியோஸ் எஸ்-7 டேப்லெட்டாகத்தான் இருக்கும். அமைப்பிலும், உறுதியிலும் மற்றும் செயல் திறனிலும் இந்த ஹூவெய் டேப்லெட் சூப்பராக இருக்கிறது.

ஹூவெய் ஐடியோஸ் எஸ்-7 டேப்லெட்டின் சிறப்புகள் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் இருக்கின்றன. அதாவது இதில் ஜிஎஸ்எம் அல்லது 3ஜி வசதி இருக்கிறது. இதன் இயங்குதளம் ஆன்ட்ராய்டு ப்ரேயோ ஆகும். மேலும் இந்த டேப்லெட் மிகவும் உறுதியானது. இதன் திரை பளிச்சென்று இருக்கிறது. மேலும் இது ஒரு மெல்லிய டேப்லெட் ஆகும். இதன் திரை டிஎப்டி கெப்பாசிட்டிவ் வசதி கொண்டது.

இந்த டேப்லெட் 2 கேமராக்களைக் கொண்டுள்ளது. அதுபோல் இதி்ல் ஆடியோ ஜாக்கும் உள்ளது. மேலும் இது 768 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் மற்றும் 256 எம்பி ரேமையும் கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டின் இன்டர்னல் மெமரி 5 ஜிபி ஆகும்.

ஹூவாய் ஐடியோஸ் எஸ்-7 டேப்லெட்டின் இணைப்பு வசதிகளைப் பார்த்தால் அது மைக்ரோ யூஎஸ்பி போர்ட், மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட், ஜிபிஎஸ், வைஃபை, இடிஜிஇ, ஜிபிஆர்எஸ் போன்றவற்றைக் கொண்டிருக்கிறது. இதன் பேட்டரி நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டின் மொத்த பரப்பு 200 மிமீ x 109.5 மிமீ x 12.5 மிமீ ஆகும்.

குறிப்பாக குறைந்த விலையில் வரும் தொடக்க நிலையில் இருக்கும் புதிய டேப்லெட்டுகளின் செயல் திறன் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்காது. ஆனால் இந்த ஹூவாய் டேப்லெட் அப்படி இல்லை. மாறாக இதன் அமைப்பிலும், உறுதியிலும், செயல் திறனிலும் மிகவும் அமர்க்களமாக இருக்கிறது.

இந்த டேப்லெட் கறுப்பு வெள்ளை நிறங்களில் வருகிறது. இதன் பின் புறம் கருப்பு நிறத்தில் இருக்கிறது. அதுபோல் இதன் ரியர் கேமரா வெள்ளை நிறத்தில் இருக்கிறது. மேலும் இந்த டேப்லெட் மெல்லியதாகவும் அதே நேரத்தில் கையடக்கமாகவும் உள்ளதால் இதை வெளியில் எடுத்துச் செல்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

இதன் சிறிய குறைபாடு எஇதன் இன்டர்னல் சேமிப்பு மெமரி மிகக் குறைந்த அளவே உள்ளது. அதனால் கூடுதல் மெமரி கார்டு இருந்தால் இதில் அதிக சேமிப்பு வசதியை பெற முடியும்.

இந்த ஹூவெய் ஐடியோஸ் எஸ்-7 டேப்லெட் வாடிக்கையாளர்களை பெரிய அளவில் கவரும் விதத்தில் ரூ.20,000 என்ற விலையில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X