Home
Computer

கிராபிக்சில் கலக்கப் போகும் எச்டிசி டேப்லெட்!

By Super

கிராபிக்சில் கலக்கப் போகும் எச்டிசி டேப்லெட்!
எச்டிசியின் புதிய டேப்லெட்டைப் பற்றிய பரபரப்பான செய்திகள் பரவலாக வந்துகொண்டே இருக்கின்றன. இந்த புதிய எச்டிசி டேப்லெட் மீண்டும் என்விஐடிஐஏ கிராபிக்ஸ் பிராசஸருடன் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த புதிய குவாட்ரோ டேப்லெட் வரும் ஆண்டு பிப்ரவரி நடக்கும் உலக மொபைல் காங்கிரசில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. குறிப்பாக எச்டிசியும், என்விஐடிஐஏவும் இணைந்து பல நல்ல சாதனங்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருக்கின்றன. ஏனெனில் என்விடியா சிப்செட்டுடன் வரும் எச்டிசி டேப்லெட் மிகத் தரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

எச்டிசி குவாட்ரோ டேப்லெட் 10.1 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கும். இதன் பிக்சல் ரிசலூசன் 1280 x 768 ஆகும். அதனால் இது உயர் டெபினிசன் கொண்ட வீடியோக்களையும், வீடியோ கேம்களையும், கிராபிக்ஸ்களையும் சப்போர்ட் செய்யும்.

இந்த டேப்லட் 2 கேமராக்களைக் கொண்டிருக்கிறது. இதன் ரியர் கேமரா 2 மெகா பிக்சலைக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் இது ஹைடெபினிஷன் வீடியோவையும் சப்போர்ட் செய்யும்.

இதன் முகப்பு கேமரா 1.3 மெகா பிக்சலைக் கொண்டிருக்கும். இதன் மூலம் வீடியோ கால் செய்வது மிக எளிதாக இருக்கும். இந்த முகப்பு கேமரா 720பி ரிசலூசன் கொண்ட வீடியோவை ரிக்கார்ட் செய்யும் திறன் கொண்டது.

எச்டிசி குவாட்ரோ டேப்லெட் என்விஐடிஏ கிராபிக்ஸ் ப்ராசஸரைக் கொண்டிருக்கும். இது எபி30 டேக்ரா 3 ப்ராசஸரில் இயங்கும். இதில் அதிவேகத்துக்காக 1ஜிபி ரேம் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மெமரி சேமிப்பு திறன் 16ஜிபி ஆகும். இதில் மெமரி கார்டை இணைத்து மெமரியை அதிகரிக்கவும் முடியும். மைக்ரோஎஸ்டி கார்டையும் இணைக்க முடியும்.

இணைப்பு வசதிகளைப் பார்க்கும் போது எச்டிசி குவாட்ரோ டேப்லெட் ப்ளூடூத் 4.0 வெர்சனைக் கொண்டுள்ளது. அதுபோல் 5 ஜிகாஹெர்ட்ஸ் வைஃபை இணைப்பையும் கொண்டுள்ளது. இவற்றின் மூலம் தகவல் பரிமாற்றத்தை மிக விரைவாகச் செய்ய முடியும்.

அடுத்ததாக இந்த டேப்லெட் பீட்ஸ் ஆடியோவை வழங்குகிறது. அதனால் இதில் தரமான இசையையும் கேட்க முடியும். ஸ்டீரியோ அவுட்புட் கொண்ட இரண்டு ஸ்பீக்கர்களும் இதில் உள்ளன. இதில் உள்ள முக்கிய அம்சம் டூவல் மைக்ரோ போன்களாகும். இவை வீடியோ கான்பரன்ஸ் செய்யும் போது பேச்சு மிகத் தெளிவாக இருக்க உதவும்.

மேலும் இந்த குவாட்ரோ டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும். டிஜிட்டல் பென் இன்புட்டும் கொண்டு வருகிறது. மேலும் இந்த டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுபற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X