Home
Computer

எச்டிசி குவாட்ரோ, மோட்டோரோலா சூம்-2 டேப்லெட்டுகள்: எது பெஸ்ட்?

By Super

எச்டிசி குவாட்ரோ, மோட்டோரோலா சூம்-2 டேப்லெட்டுகள்: எது பெஸ்ட்?
எச்டிசி சிப்ட் மற்றும் எச்டிசி ப்ளேயர் போன்ற அம்சாமான டேப்லெட்டுகளை எச்டிசி அறிமுகப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, எச்டிசி கட்டிங் எட்ஜ் தொழில் நுட்பம் கொண்ட டேப்லெட்டுகளைக் எச்டிசி களமிறக்குகிறது.

இதேபோன்று,மோட்டோரோலா நிறுவனமும் டேப்லெட் உலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது. அதன் புதிய மோட்டோரோலா சூம் டேப்லெட் வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து, தற்போது மோட்டோரோலா சூம் 2 என்ற புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்திருக்கிறது மோட்டோரோலா.

புதிதாத வரும் எச்டிசி குவாட்ரோ மற்றும் மோட்டோரோலா சூம் 2 ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கும் போது இரண்டுமே சிறப்பான அம்சங்களைக் கொண்டு வருகின்றன. குறிப்பாக சூம் 2ன் மொத்த பரப்பு 253.9 மிமீ x 173.6 மிமீ x 8.8 மிமீ ஆகும். இதன் மொத்த எடை 599 கிராம் ஆகும். அதே நேரத்தில் எச்டிசி குவாட்ரோவின் தடிமன் 9மிமீக்கும் குறைவானதாகும்.

திரை அளவைப் பார்த்தால் இந்த 2 டேப்லட்டுகளுமே 10.1 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளன. இந்த டிஸ்ப்ளே கெப்பாசிட்டிவ் மற்றும் மல்டி டச் வசதி கொண்டிருக்கின்றன. சூம் 2ன் ரிசலூசன் 1280 x 720 பிக்சல் ஆகும். அதே நேரத்தில் குவாட்ரோவின் ரிசலூசன் 1280 x 768 பிக்சல் ஆகும். சூம் 2 கீறல் தடுப்பு வசதிக்காக கண்ணாடி உறையை கொண்டிருக்கிறது.

இந்த 2 டேப்லட்டுகளுமே முன் பகுதியில் லைட் சென்சார்களைக் கொண்டுள்ளன. இரண்டும் டூவல் கேமராக்களைக் கொண்டுள்ளன. சூம் 2 ஆட்டோ போக்கஸ் கொண்ட 5 மெகா பிக்சல் மெயின் கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் அதில் எல்இடி ப்ளாஷ் வசதியும் உண்டு. குவாட்ரோவின் முக்கிய கேமரா 2 மெகா பிக்சல் திறன் கொண்டது. மேலும் இந்த இரண்டு டேப்லெட்டுகளும் 1.3 மெகா பிக்சல் முகப்பு கேமரைவையும் கொண்டுள்ளன.

சூம் 2 டூவல் கோர் பிராசஸர் கொண்டிருக்கிறது. இதன் கடிகார வேகம் 1200 மெகா ஹெர்ட்ஸ் ஆகும். அதுபோல் இதன் மொத்த மெமரி 16 ஜிபி ஆகும். எச்டிசி டேப்லெட் குவாட் கோர் டேக்ரா 3 பிராசஸரைக் கொண்டுள்ளது. மேலும் இதன் ரேம் 1ஜிபி ஆகும்.

இந்த இரண்டு டேப்லெட்டுகளுமே ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்குகின்றன. குவாட்ரா ஆன்ட்ராய்டின் 4.0 வெர்சனையும், சூம் 2 ஆன்ட்ராய்டின் 3.2 வெர்சனையும் கொண்டுள்ளன. தகவல் பரிமாற்றத்திற்காக இரண்டுமே புளூடூத், யுஎஸ்பி மற்றும் வைஃபை இணைப்பைக் கொண்டுள்ளன. இரண்டுமே மல்டிமீடியா சப்போர்ட் கொண்டவை. எல்லா ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்டுகளை சப்போர்ட் செய்யும்.

விலையைப் பொறுத்தமட்டில் மோட்டோரோலா சூம் 2 டேப்லெட் ரூ. 27500க்கு கிடைக்கிறது. எச்டிசி குவாட்ரோவின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X