புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட் தயாரிப்பில் எச்டிசி!

சூப்பரான ஸ்மார்ட்போன்களை தயாரித்து வழங்குவதில் முன்னனியில் இருக்கும் எச்டிசி நிறுவனம் ஒரு புதிய டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது. இந்த டேப்லெட்டைப் பற்றிய அதிகார்ப்பூர்வமான தகவல்கள் வரவில்லையென்றாலும் பல்வேறு இணையதளங்களில் இந்த புதிய டேப்லெட்டைப் பற்றி ஏராளமாக செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
அதன்படி இந்த புதிய டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வரும் என்று தெரிகிறது. அதோடு இந்த டேப்லெட்டை மிகச் சிறந்த முறையில் கொண்டு வர எச்டிசி வெகுவாக மெனக்கிட்டு வருகிறது.
உலக டேப்லெட் சந்தையில் எச்டிசி வழங்கிய ப்ளையர் டேப்லெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளதால் இந்த புதிய டேப்லெட்டுக்கும் சூப்பாரன வரவேற்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
குறிப்பாக ப்ளையர் டேப்லெட்டை முதலில் ரூ.50,000க்கு விற்பனை செய்தது எச்டிசி. ஆனால் அந்த டேப்லெட் போனியாகாததால், விலையை அதிரடியாக ரூ.18,000க்கு குறைத்தது. அதன் பிறகு ப்ளையர் டேப்லெட்டின் விலை சூடுபிடிக்கத் தொடங்கியது. எனவே தனது பழைய அனுபவத்தை மனதில் வைத்து தனது புதிய டேப்லெட்டைக் களமிறக்க கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறது.
அதனால் எச்டிசியின் இந்த புதிய டேப்லெட் வெற்றி பெறும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications