Home
Computer

அடுத்த ஆண்டு புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்துகிறது எச்டிசி

By Super

அடுத்த ஆண்டு புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்துகிறது எச்டிசி
அழகான் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வழங்குவதில் எச்டிசிக்கு தனி இடம் இருக்கிறது. தைவான் நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம் உலக அளவில் ஸ்மார்ட் போன் விற்பனையில் 5வது இடத்தில் இருக்கிறது.

கட்டிங் எட்ஜ் டிஸைனுடன் ஸ்மார்ட்போன் வந்த பிறகு உலகிலேயே முதல் க்வாட் கோர் ப்ராசஸர் கொண்ட டேப்லெட்டை களமிறக்க இருக்கிறது எச்டிசி.

அடுத்த ஆண்டு இந்த புதிய டேப்லெட்டை களமிறக்க இருக்கிறது எச்டிசி. மேலும் இந்த டேப்லட்டில் எல்லா வகையான தொழில் நுட்பங்களையும் சேர்க்க திட்டமிட்டிருக்கிறது. அதோடு தனது போட்டியாளர்கள் மத்தியில் தனது ஸ்மார்ட்போன் தனியாக நின்று வெற்றி பெற வேண்டுமென்பதில் குறியாக இருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளில் எச்டிசி 2 டேப்லெட்டுகளை மட்டுமே அறிமுகப்படுத்தியது. அவை எச்டிசி ஜெட்ஸ்ட்ரீம் மற்றும் எச்டிசி ஃப்ளையர் ஆகும். குறிப்பாக சாம்சங் போன்ற நிறுவனங்கள் தமது சூப்பரான டேப்லட்டுகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த வேளையில் எச்டிசி தனது ப்ளையர் டேப்லட்டை 2011 உலக மொபைல் காங்கிரஸில் அறிமுகப்படுத்தியது. அந்த டேப்லெட் சிறந்த ஸ்டைலுடன் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

அதே நேரத்தில் எச்டிசி ஜெட்ஸ்ட்ரீம் ஆன்ட்ராய்டு ஹனிஹோம் இயங்குதளத்தில் இயங்கக்கூடிய முதல் டேப்லெட் ஆகும். இந்த ஜெட்ஸ்ட்ரீம் 4ஜி எல்டிஇ வசதிகளைக் கொண்டிருக்கிறது. தொழில் நுட்பத்தில் இது பட்டையைக் கிளப்பினாலும் இதன் விலை சற்று அதிகமாக இருக்கிறது.

உலக டேப்லட் சந்தையில் தனது உறுதியான தடங்களைப் பதிக்க வேண்டும் என்றால் எச்டிசி மற்ற டேப்லட்டுகளை விட வித்தியாசமான டேப்லட்டுகளை அறிமுகப்படுத்த வேண்டும். மேலும் ஐஸ்க்ரீம் சான்ட்விச் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கக்கூடிய டேப்லட்டுகளை எச்டிசியால் அறிமுகப்படுத்த முடியும்.

அது கண்டிப்பாக உலகத்தின் கவனத்தை மிக எளிதாக ஈர்த்துவிடும். குறிப்பாக அதிலிருக்கும் சென்ஸ் யூசர் இன்டர்பேஸ் ஒரு தனிச் சிறப்பை அளிக்கும். ஆனால் வரவிருக்கும் புதிய டேப்லெட்டைப் பற்றி இன்னும் முழுமையான தகவல்களை அதிகார்ப்பூர்வமாக எச்டிசி இன்னும் அறிவிக்கவில்லை.

எச்டிசி ஏற்கனவே அறிமுகப்படுத்திய 2 டேப்லெட்டுகளும் விலை அதிகம் என்பதால் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பெற முடியவில்லை. இத்தகைய சூழலில் தனது புதிய டேப்லெட்டின் மூலம் டேப்லட் சந்தையில் தனது முதல் வெற்றியைப் பெற காத்துக் கொண்டிருக்கிறது எச்டிசி.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X