Home
Computer

டோக்கோமோ-எச்டிசி கூட்டணியில் வரும் புதிய ஸ்மார்ட்போன்!

By Super
 டோக்கோமோ-எச்டிசி கூட்டணியில் வரும் புதிய ஸ்மார்ட்போன்!

உலக அளவில் எச்டிசி ஸ்மார்ட் போன்களுக்கு அதிக மவுசு உள்ளது. இந்தியாவிலும் எச்டிசி தனது மொபைல் சாதனங்களை அடிக்கடி களமிறக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது டாட்டா டொக்கோமோ நிறுவனத்துடன் சேர்ந்து ஒரு புதிய ஸ்மார்ட் போனை இந்தியாவில் களமிறக்க இருக்கிறது.

இந்த புதிய ஸ்மார்ட் போனுக்கு எச்டிசி டிசையர் விசி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 4 இன்ச் அளவு திரையுடன் வரும் இந்த ஸ்மார்ட் போன் ரூ.21,999க்கு விற்கப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட் போனில் டூவல் சிம் வசதி உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் எச்டிசி சென்ஸ் 4.0வுடன் இன்டக்ரேட் செய்யப்பட்ட ஆன்ட்ராய்டு 4.0 இயங்கு தளத்தில் இயங்கும். அதோடு இந்த ஸ்மார்ட் போன் 4ஜிபி சேமிப்புடன் வருகிறது. இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை விரவு செய்ய முடியும்.

இந்த ஸ்மார்ட் போன் 5எம்பி அளவில் ஆட்டோ போக்கஸ் மற்றும் ப்ளாஸ் கொண்ட ஒரு சூப்பரான கேமராவையும் கொண்டிருக்கிறது. இது 1ஜிஹெர்டஸ் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இதன் இயங்கு வேகமும் அபாரமாக இருக்கும்.

இனைப்பு வசதிகளுக்காக இந்த ஸ்மார்ட் போன் ப்ளூடூத் மற்றும் வைபை போன்ற வசதிகளைக் கொண்டிருக்கிறது. அதோடு இது பீட்ஸ் ஆடியோவைக் கொண்டிருப்பதால் இதில் சூப்பராக பாடல்களைக் கேட்க முடியும். இணைப்பாக ஒரு 3.5எம்எம் ஸ்டீரியோ ஆடியோ ஜாக்கும் இந்த ஸ்மார்ட் போனில் உண்டு.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X