Home
Computer

ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் அப்டேட் பெறும் எச்டிசி ஃப்ளையர்!

By Karthikeyan
 ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் அப்டேட் பெறும் எச்டிசி ஃப்ளையர்!

சில வருடங்களுக்கு முன்பு இணையதளத்தை ப்ரவுஸ் செய்ய உதவும் சிறிய ஸ்மார்ட்போன் டிவைஸ் பெரிய ஆச்சிரயமான விஷயமாகப் பார்க்கப்பட்டது. பின் நெட்புக்குகள் அந்த இடத்தை ஆக்கிரமித்தன. ஆனால் டேப்லெட்டுகள் வந்தபின் நெட்புக்குகள் காணாமல் போய்விட்டன. அதாவது டேப்லெட்டுகளில் இருக்கும் தொடுதிரை, அடக்கமான உருவம் மற்றும் குறைந்த எடை ஆகியவை நெட்புக்குகளை பின்னுக்குத் தள்ளிவிட்டன.

எச்டிசி ப்ளையர் எச்டிசி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற டேப்லெட் ஆகும். இந்த டேப்லெட் 7 இன்ச் திரையைக் கொண்டுள்ளது. இது எளிமையாக இருந்தாலும் மிக உறுதியான டேப்லெட் ஆகும். ஆனால் இது ஜிஎஸ்எம் வாய்ஸ் கம்யூனிகேசனை சப்போர்ட் செய்யாது. ஆனால் இதன் 7 இன்ச் எல்சிடி திரை மற்றும் வெள்ளி நிறம் ஆகியவை இந்த டேப்லெட்டுக்கு மெருகைக் கொடுக்கின்றன. மேலும் இது ஒரு தனித்துவம் வாய்ந்த டேப்லெட் ஆகும்.

ஆன்ட்ராய்டு வி2.3.3 ஜிஞ்சர்ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்கி வந்த இந்த எச்டிசி ப்ளையர் டேப்லெட் விரைவில் ஆன்ட்ராய்டு வி3.2 ஹனிகோம்ப் இயங்கு தளத்தைப் பெற்றது. மேலும் இதன் பலம் பொருந்திய பேட்டரி திறன் மூலம் இந்த டேப்லெட் மிகவும் பிரபலமானது.

எச்டிசி ப்ளையர் ஏற்கனவே ஆன்ட்ராய்டு வி2.3.3 ஜிஞ்சர்ப்ரீடு இயங்கு தளத்தின் மூலம் பிரபலம் அடைந்த டேப்லெட் ஆகும். இந்த டேப்லெட்டில் ஹனிகோம்ப் இயங்கு தளம் அப்டேட் செய்யப்பட்ட போது இந்த டேப்லெட் இன்னும் அதிகமாக பிரபலமடைந்து.

இந்த டேப்லெட்டில் உள்ள கேமராக்கள் 720பி எச்டி வீடியோ ரிக்கார்டிங் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் வசிதகளைத் தடை இல்லாமல் வழங்குகின்றன. தற்போது இந்த டேப்லெட் புதிய அபேடட்டைப் பெற இருக்கிறது. அதாவது இந்த டேப்லெட்டில் ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளம் அப்டேட் செய்யப்படவிருக்கிறது. இதன் இயங்கு தளம் அப்டேட் செய்யப்படுவதால் எச்டிசியின் வாடிக்கையாளர்கள் உண்மையாகவே பேரானந்தம் அடைவர்.

மேலும் இந்த எச்டிசி ப்ளையரில் ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளம் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென்றால் அதற்கு சிறிது காத்திருக்க வேண்டும். இன்னும் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. ஆனால் இந்த ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்குதளம் இந்த ஆண்டு இறுதியில் அப்டேட் செய்யப்படும் என்று தெரிகிறது.

மேலும் இன்னும் 2 வாரங்களுக்குள் எச்டிசி டேப்லெட்டின் அப்டேட் பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துவிடும். மேலும் ஜிஞ்சர்ப்ரீட் இயங்குதளத்தைப் பயன்படுத்தும் எச்டிசி வாடிக்கையாளர்கள் ஹனிகோம்ப் இயங்குதளத்தை அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் விரைவில் அவர்கள் ஐஸ் க்ரீம் இயங்குதளத்தை அப்டேட் செய்ய முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X