ஜெல்லி பீன் வெர்ஷனுன் துள்ளி வரும் எச்டிசி டேப்லட்!

இந்த புதிய ஃப்ளையர்-2 டேப்லட்டின் இயங்குதளம், ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் வெர்ஷன் கொண்டதாக இருக்கும். இதில் 7 இஞ்ச் திரை வசதி கொண்ட திரையினை பெற முடியும். இந்த திரை வசதி வெறும் 7 இஞ்ச் கொண்டதாக இருப்பினும், சிறந்த தகவல்களை வழங்கும் என்று கூறலாம்.
ஏனெனில் இந்த டேப்லட்டில் 1280 X 768 பிக்ஸல் அதிக திரை துல்லியத்தினை கொண்டதாக இருக்கும். இதனால் தகவல்களை தெளிவாக பெற முடியும்.
இந்த டேப்லட் 3 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொண்டதாக இருக்கும். ஸ்னாப்டிராகன் எஸ்-3 சிப் தொழில் நுட்ப வசதியினை இந்த எச்டிசி ஃப்ளையர்-2 டேப்லட்டில் எளிதாக பெறலாம்.
இப்படி இந்த டேப்லட் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தொழில் நுட்ப வசதிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தெளிவான தொழில் நுட்ப விவரங்கள் கூடிய விரைவில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications