Home
Computer

அகன்ற திரையுடன் எச்பி வழங்கும் ஆல் இன் ஒன் கணினி!

By Karthikeyan
அகன்ற திரையுடன் எச்பி வழங்கும் ஆல் இன் ஒன் கணினி!

ஆல் இன் ஒன் கணினிகளுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. ஏனெனில் இந்த ஆல் இன் ஒன் கணினி எல்லா வேலைகளையும் செய்யக் கூடியது. அதனால் இத்தகைய கணினிகளை தயாரிப்பதில் இப்போது பல நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக எச்பி நிறுவனம் ஒரு புதிய ஆல் இன் ஆல் கணினியை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய கணினியின் பெயர் ஓம்னி 27 ஆகும்.

அடிப்படையில் இந்த ஓம்னி ஒரு அடக்கமான சக்தி வாய்ந்த கணினி ஆகும். இந்த கணினி 27 இன்ச் அளவுள் டிஸ்ப்ளே கொண்டு 1920 x 1080 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. அதுபோல் இதன் ப்ராசஸர் இன்டல் 2ஜி ஐ3-ஐ7 ப்ராசஸர் ஆகும். மேலும் இது 4ஜிபி அல்லது 8ஜிபி வரையில் சிஸ்டம் மெமரியைக் கொண்டுள்ளது. க்ராபிக்ஸ் வேலைகளுக்காக ட்ஸ்க்ரீட் க்ராபிக்ஸ் கார்டு எஎம்டி அல்லது என்விடியா கொண்டிருக்கிறது. அதுபோல் 3டிபி வரை சேமிப்பு வசதி இந்த கணினியில் உள்ளது. ஒலி அமைப்பிற்காக இந்த கணினி பீட்ஸ் ஆடியோவை வழங்குகிறது. அதோடு ப்ளூ-ரே அல்லது டிவி டியூனர் வசதியும் இந்த கணினியில் நாம் பார்க்க முடியும்.

இந்த ஓம்னி கணினியின் முக்கிய அம்சம் இதன் 27 இன்ச் கொண்ட பெரிய திரை ஆகும். இந்த திரை மிகப் பளிச்சென்று இருக்கும். ஆனால் இது தொடு வசதியைக் கொண்டிருக்கவில்லை.

மற்ற சிறப்பு அம்சங்களைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இதன் இன்டல் ப்ராசஸர் இந்த கணினிக்கு அதிக வேகத்தைக் கொடுக்கும். அதுபோல் இதில் எச்டிஎம்ஐ போர்ட் உள்ளது. அதுபோல் இதில் வீடியோ கேம் விளையாடுவது சிறந்த அனுபவத்தைத் தரும்.

இந்த ஓம்னி கணினியின் விலை இன்னும் தெரியவில்லை. ஆனால் இது ப்ளூரே அல்லது டிவி டியூனர் கொண்டு வருவதால் இதன் விலை சற்று அதிகமான விலையி்ல் வரும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X