அதிக செயல்திறனுடன் புதிய எச்பி கம்ப்யூட்டர்!

Posted By: Staff
அதிக செயல்திறனுடன் புதிய எச்பி கம்ப்யூட்டர்!
எச்பியின் டச் ஸ்மார்ட் மேசைக் கணினியின் புதிய வடிவமாக எச்பி டச் ஸ்மார்ட் 9300 எலைட் வருகிறது. இந்த மேசைக் கணினி குறிப்பாக வர்த்தகப் பயன்பாட்டிற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

இந்த எச்பி டச் ஸ்மார்ட் 9300 எலைட் கணினி பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது. இதன் திரையைப் பார்த்தால் அது 23 இன்ச் ஆகும். இந்த திரை 1920 x 1080 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. மேலும் இந்த திரை மல்டி டச் வசதி கொண்டது. இதன் கீபோர்டு மற்றும் மவுஸ் ஆகியவை வயர்லெஸ் வசதிகளைக் கொண்டவையாகும்.

இணைப்பு வசதிகளுக்காக இந்த கணினி யுஎஸ்பி 2.0 போர்ட்டுகள், ஆடியோ போர்ட், எர்த்நெட், மெமரி கார்டு ரீடர், ப்ளூ-ரே/டிவிடி ட்ரைவ், வைபை போன்ற அத்தனை வசதிகளையும் இந்த எலைட் கணினி வழங்குகிறது. இதன் 1டிபி ஹார்ட் டிஸ்க் 7200 ஆர்பிஎம் அளவிற்கு சுழலும் தன்மை கொண்டது. இதன் ப்ராசஸர் இன்டல் 2ஜி ஆகும். அதுபோல் என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடி 425 க்ராபிக்ஸ் சிப்செட்டும் உள்ளது.

மொத்தமாகப் பார்த்தால் இந்த எச்பி டச்ஸ்மார்ட் 9300 எலைட் கணினி எச்பியின் முந்தைய டச் ஸ்மார்ட் கணினிகளை ஒத்திருக்கிறது. இதன் திரையை 5 டிகிரி முன்புறமும் 60 டிகிரி பின்பிறமும் நகர்த்த முடியும். அதுபோல் இதில் உள்ள ஸ்பீக்கர் அபாரமான இசையை வழங்கும்.

மெமரியை விரிவுபடுத்துவதற்காக இந்த கணினியில் இலவசமாக 2 எஸ்ஒ - டிஐஎம்எம் ஸ்லாட்டுகள் உள்ளன. இதில் 7 யுஎஸ்பி 2.0 போர்ட்டுகள் உள்ளன. ஆனால் இதில் யுஎஸ்பி போர்ட் 3.0 இல்லை.

இந்த எலைட் கணினியை வாங்குவோர் டிவிடி டிரைவ் அல்லது ப்ளூ-ரே ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்து கொள்ளலாம். அலுவலக வேலைகளுக்கு டிவிடி டிரைவ் போதுமானதாக இருக்கும். இந்த கணினி விண்டோஸ் 7 புரோஃபசனல் இயங்கு தளத்தைக் கொண்டிருக்கிறது.

இந்த எச்பி டச்ஸ்மார்ட் 9300 எலைட் கணினி இன்டெலின் இரண்டாம் தலைமுறை பிராசஸரைக் கொண்டிருந்தாலும், தேவைப்பட்டால் இதில் இன்டல் ஐ7-2600 பிராசஸரை பொருத்திக் கொள்ளலாம். மேலும் இதில் டிஸ்க்ரீட் க்ராபிக்ஸ் கார்டு உள்ளதால் வீடியோ மற்றும் படங்களை எடிட் செய்வது மிகவும் எளிதாக இருக்கும்.

இந்த எச்பி டச்ஸ்மார்ட் 9300 எலைட் கணினியின் விலை ரூ.40,000ல் கிடைக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot