பொழுதுபோக்கு அம்சங்களுடன் புதிய எச்பி கம்ப்யூட்டர்

Posted By: Shajahan
பொழுதுபோக்கு அம்சங்களுடன் புதிய எச்பி கம்ப்யூட்டர்

லேப்டாப், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்கள் வந்த பிறகு மேசை கனிணிகளுக்கு வரவேற்பு குறைந்துவிட்டது. கைக்கு அடக்கமாகவும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்துச்செல்லும் வகையிலும் இருப்பதே இதற்கு முக்கிய காரணம்.

அதேவேளை, சினிமா பார்ப்பதற்கும், அல்லது விளையாட்டு நிகழ்ச்சிகளை வசதியாக பார்த்து மகிழ்வதற்கும், மேசை கனிணியை மற்ற எந்த டிவைஸ்களுமே விஞ்ச முடியாது.

மேசை கணினிகளை குழந்தைகளும் மிக எளிதாக இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. பெற்றோருடன் சேர்ந்து வீட்டுப்பாடங்களையும் செய்ய முடிகிறது. இதனால், மேசை கணினிகளுக்கு இன்னும் வரவேற்பு மிக அதிகமாக உள்ளது.

தற்போது கனிணி உற்பத்தியாளர்கள் மேசை கனிணிகளில் புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்தி வருகின்றனர். குறிப்பாக பொழுதுபோக்கிற்காக எச்டி மற்றும் 3டி போன்ற தொழில் நுட்பங்களை கனிணிகளில் இணைக்கின்றனர்.

அந்த வகையில் எச்பி நிறுவனம் புதிதாக டச்ஸ்மார்ட் 620 ஆல் இன் ஒன் மேசை கனிணியை அறிமுகப்படுத்துகிறது. இந்த கனிணியல் உள்ள திரை 1920x1080 மல்டி டச் மற்றும் எச்டி வசதி கொண்டு வருகிறது. மேலும் 3டி வீடியோக்களைப் பார்ப்பதற்கான ஸ்டீரியோகோபிக் கண்ணாடிகளையும் வழங்குகிறது.

இந்த திரை 1000:1 கான்ட்ராஸ்ட் ரேசியோ கொண்டிருக்கிறது. அதுபோல் இதன் ப்ரைட்னஸ் 250 யூனிட்டுகளைக் கொண்டிருக்கிறது. அதன் ரெஸ்பான்ஸ் நேரம் 4 நிமிடங்கள் ஆகும்.

டச்ஸ்மார்ட் 620ன் ப்ராசஸர் 3.10ஜிஹெர்ட்ஸ் கோர் ஐ5 2400 2ஜி ஆகும். மேலும் இதன் இயங்குதளம் இன்டலின் 64-பிட் விணிடோஸ் 7 ஹோம் ப்ரீமியம் ஆகும். இது 8ஜிபி டிடிஆர்3 மெமரி மற்றும் க்ராபிக்ஸ் சப்போர்ட்டுக்காக ரேடியோன் எச்டி 6670எ மற்றும் ஜிடிடிஆர்5 1ஜிபி வீடியோ மெமரியையும் கொண்டுள்ளது.

டச் ஸ்மார்ட் 620 கனிணி 5400 ஆர்பிஎம்மோடு எஸ்எடிஎ 1.5டிபி ஹார்ட் டிரைவைக் கொண்டு வருகிறது. மேலும் ப்ளூ-ரே ப்ளேயர் ஸ்லாட், வைபை 802.11பி/ஜி/என் மற்றும் ஜிபிஇ லேன் கொண்டுள்ளது. இதில் உள்ள டிவி ட்யூனர் மூலம் லைப் டிவியை ரிக்கார்ட் செய்ய முடியும். மேலும் இது சிறந்த டச் இன்புட் மற்றும் 3டி வியூவிங் கொண்டு வருகிறது.

டச்ஸ்மார்ட் 620 கனிணி 7 யுஎஸ்பி 2.0 போர்ட்டுகள், 6 இன் 1 மெமரி கார்டு ரீடர், 3டி வெப்காம், ஹெட்போன் போர்ட், வயர்லஸ் மவுஸ் மற்றும் தரமான கீபோர்டு கொண்டு வருகிறது. இந்த ஆல் இன் ஒன் கனிணியில் நாம் குடும்பத்தோடு பொழுது போக்கலாம்.

எச்பி டச்ஸ்மார்ட் 620ன் விலை ரூ.80,000 முதல் ரூ.1,00,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot