Home
Computer

ஹச்பி டச்பேட் மற்றும் மோட்டோரோலா சூம் - ஒரு ஒப்பீடு

By Super
ஹச்பி டச்பேட் மற்றும் மோட்டோரோலா சூம் - ஒரு ஒப்பீடு
மொபைல் தயாரிப்பாளர்களான ஹச்பி புதிய ஹச்பி டச்பேடையும் மோட்டோரோலா மோட்டோரோலா சூம் என்ற டாப்லட்டையும் அறிமுகப்படுத்தவிருக்கின்றன.

இந்த இரண்டு புதிய டாப்லட்டுகளிலும் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் நிறைந்திருக்கின்றன. அதாவது ஹச்பி டச்பேட் வெப் ஓஎஸ் 3.0ல் இயங்குகிறது என்றால் மோட்டோரோலா சூம் ஆன்ட்ராய்டு 3.0ல் இயங்குகிறது.

இரண்டுமேல மல்டி டச் திரையைக் கொண்டிருந்தாலும் சூமின் டிஸ்ப்ளே அளவு 10 இன்ச் ஆகும். டச்பேடின் டிஸ்ப்ளே 9.7 இன்ச் ஆகும்.

கேமராவைப் பொறுத்தவரை மோட்டோரோலா சூம் 5 மெகா பிக்ஸலை கொண்டிருப்பதால் துல்லியமான தெளிவான படங்களைப் பிடிக்க முடியும். ஆனால் ஹச்பி டச்பேட் 1.3 மெகா பிக்ஸல் கேமராவையே கொண்டிருக்கிறது.

மின்திறனைப் பொறுத்தவரை ஹச்பி டச்பேட் 6300 எம்எஹச் ஸ்டாண்டர்ட் பேட்டரியையும் மோட்டோரோலா சூம் 3600 எம்எஹச் பேட்டரியையும் கொண்டுள்ளன. பேட்டரியைப் பொறுத்தவரை ஹச்பி டச்பேட் உயர்ந்து இருக்கிறது.

இரண்டுமே ப்ளூடூத், வைபை மற்றும் ஜிபிஎஸ் வசதிகளைக் கொண்டிருக்கின்றன. ஹச்பி டச்பேடின் தடிமன் 14 மிமீ, நீளம் 240மிமீ மற்றும் அகலம் 189மிமீ எடை 740 கிராம் ஆகும்.

மோட்டோரோலா சூமின் தடிமன் 12.9மிமீ, நீளம் 249மிமீ, மற்றும் அகலம் 167.8 மிமீ 730 கிராம் ஆகும். இரண்டுமே 32ஜிபி இண்பில்ட் மெமரியைக் கொண்டிருக்கிறது.

இவற்றின் விலையை எடுத்துக் கொண்டால் மோட்டோரோலா சூம் ரூ.35,000க்கும் ஹச்பி டச்பேட் ரூ.30,000க்கும் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X