Home
Computer

புத்துயிர் பெறுகிறது எச்பி டச்பேட்!

By Karthikeyan
 புத்துயிர் பெறுகிறது எச்பி டச்பேட்!

நீண்ட நாள்களுக்கு முன்பே எச்பி நிறுவனம் தனது டச்பேடை மற்ற நிறுவனங்களின் டச்பேடுகளை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தது. முதலில் டச்பேடுகளின் விலை ரூ.25000க்கும் அதிகமாக இருந்தது. ஆனால் மக்கள் மத்தியில் இது பெரிய வரவேற்பைப் பெறாததால் ஒரு சில நிறுவனங்கள் விலையைக் குறைத்தன.

ஒரு சிலர் தங்களது ட்ச்பேடுகளை சந்தையிலிருந்து நீக்கிவிட்டனர். ஆனால் ஒரு சில நிறுவனங்கள் இந்த டச்பேடுகள் அட்டகாசமான ஹார்ட்வேர்களைக் கொண்டிருந்ததால் அவற்றத் தொடர்ந்து விற்று வந்தனர். மேலும் சினோஜென் போன்ற ஒரு சில தனியார் நிறுவனங்கள் எச்பி டச்பேடில் உள்ள முக்கிய அம்சங்களை வெளிக் கொணர முனைந்தனர்.

முதலில் மக்கள் மத்தியில் எச்பி டச்பேட் ஏன் எடுபடவில்லை என்றால் அதன் அப்ளிகேசன்கள் மற்றும் யூட்டிலிட்டிஸ் மிகவும் குறைவானவை. அதனால் சினோஜென் மிகவும் எச்சரிக்கையாக கையாண்டு இந்த டச்பேடை ஆன்ட்ராய்டிற்கு மாற்றியது. அதனால் இந்த டச்பேட் புத்துயிர் பெற்று பழையது போல அல்லாமல் புதியதாக செயல்படும். அதுபோல் இதில் யூட்டிலிட்டிஸ் அதிகரிக்கப்பட்டன. மேலும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏராளமாக சேர்க்கப்பட்டன. அதுபோல் இதன் திரையில் கஸ்டமைஸ்டு ஐக்கன்களான ஹோம், மெனு மற்றும் பேக் போன்ற குறிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

எனவே சினோஜென் உதவியுடன் வந்த இந்த டச்பேட் சினோஜென்மோட் 7 என்ற பெயரில் புத்துயிர் பெற்று வாடிக்கையாளர்களைக் கவர ஆரம்பித்தது. இப்போது எச்பி டச்பேடில் ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தை சினோஜென் பரிசோதித்தது. அதன் பயனாக எச்பி டச்பேட் ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளத்தைப் பெற்றது. அதனால் இப்போது இந்த டச்பேட் சூப்பராக உள்ளது. ஆனாலும் இதில் உள்ள கேமரா மற்றும் வீடியோ ப்ளேபேக் போன்றவை இன்னும் கவனிக்கப்பட வேண்டும். விரைவில் ஜினோஜென் 9 வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X