Home
Computer

வியக்கவைக்கும் விலையில் ஹெச்பி புதிய லேப்டாப் அறிமுகம்.!

ஹெச்பி ஆடியோ பூஸ்ட் 2.0 தொழில்நுட்பத்துடன் பேங் வசதியுடன் இயங்கும் குவாட் ஸ்பீக்கர்களை கொண்டு ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 லேப்டாப் வெளிவந்துள்ளது.

ஹெச்பி நிறுவனம் தற்சமயம் புதிய ஸ்பெக்டர் எக்ஸ்360 லேப்டாப் மாடல்களை அறிமுபம் செய்துள்ளது, இந்த லேப்டாப் மாடல் பொறுத்தவரை நோட்புக் போன்று இருக்கிறது. மேலும் இந்த சாதனம் புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டு
வெளிவந்துள்ளது.மற்ற லேப்டாப் சாதனங்களை விட மிகவும் அருமையாக மடிக்கக்கூடிய வகையில், பின்பு எந்த கோணங்களிலும் பார்க்கும் வகையிலும் இந்த லேப்டாப் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

வியக்கவைக்கும் விலையில் ஹெச்பி  புதிய லேப்டாப் அறிமுகம்.!

புதிய ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 லேப்டாப் மாடல் சாம்பல் மற்றும் நீல நிறங்களில் வெளிவந்துள்ளது, பின்பு அனைத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த லேப்டாப் மாடல்களை வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

13.3-இன்ச் எப்எச்டி ஐபிஎஸ் மைக்ரோ -எட்ஜ் எல்இடி பேக்லைட் டச் டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் 1920 x 1080 பிக்சல் திர்மானம் கொண்ட ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 லேப்டாப் மாடல்.

அதேபோன்று 13.3-இன்ச் 4கே ஐபிஎஸ் மைக்ரோ எட்ஜ் எல்இடி-பேக்லைட் டச் டிஸ்பிளே மற்றும் 3840 x 2160 பிக்சல் திர்மான் கொண்ட ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 லேப்டாப் மாடல் என்ற இரண்டு வித்தியசங்களில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு கார்னிங் கொரில்லா கிளாஷ் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மென்பொருள்:

மென்பொருள்:

இந்த லேப்டாப் சாதனம் 8-வது ஜென் இன்டெல் கோர் i5-8265U / i7-8565U குவாட்-கோர் செயலி கொண்டுள்ளது. மேலும் இன்டெல் யுஎச்டி கிராபிக்ஸ் 620 வசதியும் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 சேமிப்பு:

சேமிப்பு:

ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 லேப்டாப் சாதனம் பொதுவாக 8ஜிபி/6ஜிபி LPDDR3-1866 SD ரேம் வசதி மற்றும் 256ஜிபி/512ஜிபி/1டிபி PCIe NVMe M.2 SSD உள்ளடக்க சேமிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த லேப்டாப் மாடல்.

இயங்குதளம்:

இயங்குதளம்:

ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 லேப்டாப் பொறுத்தவரை விண்டோஸ் 10 ப்ரோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு டிஜிட்டல் வெப் கேமரா மற்றும் மைக்ரோபோன் ஆதரவைக் கொண்டுள்ள இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.

ஸ்பீக்கர்கள்:

ஸ்பீக்கர்கள்:

ஹெச்பி ஆடியோ பூஸ்ட் 2.0 தொழில்நுட்பத்துடன் பேங் வசதியுடன் இயங்கும் குவாட் ஸ்பீக்கர்களை கொண்டு ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 லேப்டாப் வெளிவந்துள்ளது. பின்பு டூயல் பேண்ட் வைஃபை 802.11 மற்றும் ப்ளூடூத் 5.0 போன்ற வசதிகளை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

பேட்டரி மற்றும் விலை:

பேட்டரி மற்றும் விலை:

டூயல் தண்டர் போல்ட் 3 போர்ட், யுஎஸ்பி டைப்-சி, 3.1ஜென் 1 போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு 61வாட் பேட்டரி இதில் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.129,990 மற்றும் ரூ.169,990-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HP Spectre x360 and Spectre Folio with leather case officially launched : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X