Home
Computer

ஐஆர் கேமரா & கைரேகை ஸ்கேனர் வசதியுடன் ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 லேப்டாப் அறிமுகம்.!

ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 லேப்டாப் மாடல் பொறுத்தவரை 15-இன்ச் டிஸ்பிளே மற்றும் கன்வெர்டிபிள் வசதியைக் கொண்டுள்ளது.

By Prakash

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 லேப்டாப் மாடலை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகில் நடைபெற்ற சிஇஎஸ் 2018- நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது ஹெச்பி நிறுவனம். மேலும் நவீன மென்பொருள் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 லேப்டாப் மாடல்.

ஃபாஸ்ட் சார்ஜிங் திறமையை கொண்டுள்ளது இந்த ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 லேப்டாப். மேலும் இணையம், வீடியோகேம் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு இந்த லேப்டாப் மாடல் மிக அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஹெச்பி என்வி எக்ஸ்2 ஹைப்ரிட் லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 லேப்டாப் மாடல் பொறுத்தவரை 15-இன்ச் டிஸ்பிளே மற்றும் கன்வெர்டிபிள் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 12மணி நேரம் இவற்றில் பேட்டரி பேக்கப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது.

இன்டெல் கோர்:

இன்டெல் கோர்:

இந்த லேப்டாப் மாடல் பொறுத்தவரை 8-வது ஜெனரேஷன் இன்டெல் கோர் ஐ7-8705ஜி செயலி மற்றும் ரேடியான் ஆர்எக்ஸ் வேகா கிராபிக்ஸ் அம்சங்களை கொண்டுள்ளது.

ஹெச்பி என்வி எக்ஸ்2 ஹைப்ரிட் லேப்டாப் :

ஹெச்பி என்வி எக்ஸ்2 ஹைப்ரிட் லேப்டாப் :

ஹெச்பி என்வி எக்ஸ்2 ஹைப்ரிட் லேப்டாப் மாடல் பொறுத்தவரை 8-வது ஜெனரேஷன் இன்டெல் கோர் செயலி மற்றும் என்வீடியோ ஜீஃபோர்ஸ்
எம்எக்ஸ் 150 டிஸ்க்ரீட் கிராபிக்ஸ் வசதியைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப் மாடல் 13.5மணி நேரம் பேட்டரி பேக்கப் திறமையை கொண்டுள்ளது.

 சில்வர் மற்றும் காப்பர்:

சில்வர் மற்றும் காப்பர்:

ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 லேப்டாப் மாடல் பொறுத்தவரை சில்வர் மற்றும் காப்பர் லூக்ஸ் அக்சென்ட் என ஒற்றை நிறத்தில் மட்டும் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10:

விண்டோஸ் 10:

விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 லேப்டாப் மாடல் சிஇஎஸ் 2018- நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் யுஎஸ்பி, எச்டிஎம்ஐ, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளன.

கைரேகை ஸ்கேனர்:

கைரேகை ஸ்கேனர்:

ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 லேப்டாப் மாடலில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கைரேகை ஸ்கேனர், விண்டோஸ் ஹெல்லோ, ஐஆர்
கேமரா போன்றவை இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
HP Spectre x360 15 inch 2018 hands on review ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X