வியக்கவைக்கும் விலையில் ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 13 லேப்டாப் மாடல் அறிமுகம்.!
ஹெச்பி நிறுவனம் இன்று தனது புதிய ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 13 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனத்தின் விலை சற்று உயர்வாக இருக்கிறது, இருந்தபோதிலும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்க்கது.

ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 13 டிஸ்பிளே
ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 13 லேப்டாப் மாடல் பொதுவாக 13.3-இன்ச் 4கே (3840 x 2160 பிக்சல்) டிஸ்பிளே வடிவமைப்பைக கொண்டுள்ளது, பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதி மற்றும் சிறந்த பிரைட்நஸ் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த சாதனம்.

பேட்டரி அமைப்பு
ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 13 லேப்டாப் மாடல்; 4-செல் 60வாட் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்படி 22மணி நேரம் பேட்டரி ஆயுள் வழங்கக்கூடிய திறமை இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

வைஃபை, யுஎஸ்பி 3.2 டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ 2.0 போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், வெப்கேமரா, உள்ளிட்டபல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம்
செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சேமிப்பு மற்றும் விலை
10-வது ஜென் இன்டெல் கோர்ஐ5-1034ஜி1 பிராசஸர் மற்றும் 8ஜிபி LPDDR4 ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரிஆதரவு கொண்ட இந்த ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 13 லேப்டாப் மாடல்; விலை ரூ.78,000-ஆக உள்ளது.
இன்டெல் கோர் ஐ7-1065ஜி7 பிராசஸர் மற்றும் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 13 லேப்டாப்
மாடல் விலை ரூ.1,00,600-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாங்கச் சிறந்தது
ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 13 லேப்டாப் மாடல் பொதுவாக சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது,பின்பு இந்த சாதனம் ஆப்பிள் நிறுவனத்தின் லேப்டாப் மாடல்களுக்கு போட்டியா வெளிவந்துள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications