Home
Computer

உயர்தரத்தில் எச்பி வழங்கும் புதிய லேப்டாப்!

By Karthikeyan
உயர்தரத்தில் எச்பி வழங்கும் புதிய லேப்டாப்!

எச்பி நோட்புக்குகள் உலக அளவில் அதிகமாக விற்பனையாகும் லேப்டாப்புகளில் ஒன்றாகும். அதற்கு காரணம் அவற்றினுடைய உயர் தரமும் அதே நேர்த்தில் அதன் அபாரமான செயல் திறனும் ஆகும். தற்போது எச்பி ப்ரோபுக் வரிசையில் புதிதாக எச்பி ப்ரோபுக் 6560பி என்ற புதிய லேப்டாப்பைக் களமிறக்குகிறது எச்பி நிறுவனம்.

இந்த ப்ரோபுக் 6560பி லேப்டாப்பின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது இன்டல் 2ஜி ஐ3 அல்லது ஐ5 அல்லது ஐ7 ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. இதன் சிப்செட் எச்எம்65 ஆகும். மேலும் இதில் இன்டல் எச்டி க்ராபிக்ஸ் 3000 யூனிட்டும் உண்டு.

இதன் டிஸ்ப்ளேயைப் பார்த்தால் இது 15.6 இன்ச் அளவு கொண்டு எல்இடி பேக்லிட் மற்றும் ஆன்டிக்ளே கோட்டிங் வசதியைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேயின் ரிசலூசன் 1366 x 768 பிக்சல்கள் ஆகும். மேலும் இதன் ரேம் 16ஜிபி ஆகும். அதுபோல் இது 750ஜிபி சட்டா எச்டிடி சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது.

இணைப்பு வசதிக்காக இந்த லேப்டாப் வைபை, ப்ளூடூத், எச்டிஎம்ஐ, ஜிகாபிட் எர்த்நெட் லேன், ஆர்ஜே-45 மற்றும் 3 யுஎஸ்பி போர்ட்டுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் பேட்டரி 6 செல் கொண்ட லித்தியம் ஐயன் பேட்டரி ஆகும்.

இந்த ப்ரோபுக் லேப்டாப் மிக ஸ்டைலாக இருக்கிறது. மேலும் கருப்பு நிறத்தில் வருவதால் ஒரு தொழில் ரீதியான லேப்டாப்பாக தோன்றுகிறது. மேலும் இது கருப்பு நிறத்தில் வருவதால் கைரேகைகள் இதில் தெரியாது. இதன் மத்தியில் எச்பியின் முத்திரை வருகிறது. இதன் கீபோர்ட் மற்றும் தொடுதளம் ஆகியவையும் கருப்பு நிறத்தில் வருகின்றன. மேலும் இதன் தொடுதளம் அகலமாக உள்ளதால் உள்ளங்கையை இதன் தொடுதளத்தில் வசதியாக வைத்துக் கொள்ளலாம்.

இந்த ப்ரோபுக் லேப்டாப் 2 மெகா பிக்சல் கொண்ட முகப்பு வெப் கேமராவைக் கொண்டுள்ளது. அதனால் வீடியோ குழு உரையாடலை மிக அருமையாகச் செய்ய முடியும். இந்த ப்ரோபுக் 650பி லேப்டாப்பின் விலை ரூ.50,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X